யுத்தம் சரணம் பாகம் 9
கி.பி. 1796_ல் ஆரம்பித்த முயற்சி. ஒரு நாலைந்து வருடங்கள் கூடக் கஷ்டப்-படாவிட்டால் எப்படி? கொஞ்சம் முறைப்பு. கொஞ்சம் வெறுப்பு. மிரட்டலில் கொஞ்சம். உருட்டலில் கொஞ்சம். அன்பாகக் கேட்கலாம். அதட்டியும் பார்க்கலாம். அடித்துக்கொள்ளவும் ஆட்சேபணை இல்லை. ஹாலந்துப் படைகள் வலிமையானவைதான். ஆனால், பிரிட்டன் படை-களுடன் ஒப்பிட்-டால் சிறியவை. நீண்ட-நாள் தாக்குப் பிடிப்பது சிரமம்.
ஆனால் ஒரு நோக்-கத்துடன் வந்துவிட்டார்-கள். சிலோன் என்கிற இலங்கைத் தீவு. யாருக்-கும் பார்த்த மாத்திரத்தில் காதல் பற்றிக்கொள்ளச் செய்யும் தீவுதான். முடிந்தவரை போராட-லாம் என்பதைத் தவிர இந்தத் தருணத்தில் செய்-யக்கூடியது வேறொன்று-மில்லை.
1802_ல் பிரிட்டனுக்கும் பிரான்சுக்கும் இடையே ஏற்பட்ட அந்த அமைதி ஒப்பந்தம் வரை இந்த மோதல்கள் நீடித்தன. ஒப்பந்தம் ஆன மறு-நாளே இலங்கையில் இருந்த டச்சுப்படைகள், பிரிட்-டன் படைகளுடன் கைகுலுக்கிவிட்டன. என்னது? நாம் எதிரிகளா? யார் சொன்னது? உன்-னோடு நான் உருண்ட ஒவ்வொரு போர்க்களமும் ஊருக்குப் போவ-தற்குள் உனதாகும் கண்மணியே. இந்தா, எடுத்துக்-கொள். உட்கார்ந்து ஆட்சி செய். காலம் உன்னுடையது. இனி வரும் காட்சிகள் உன்னு-டை-யவை. தீவு உன்னுடையது. தீர்வுகள் உன்னுடையவை.
ஆனால் ஒன்று. என் பிராந்தியங்களுடன் திருப்தி-யுறுபவன் அல்ல நீ. எனக்குத் தெரியும். தீவின் மத்தியில் இருக்கிற கண்டிப் பேரரசு உனக்கு உறுத்-தும். பங்காளிச் சண்டைதான் போட்டுக்-கொண்டி-ருக்கிறார்கள். என்ன-வாவது செய்து அதையும் பிடித்துவிடப் பார்ப்பாய். உனக்கு என் ஆசிகள். நாயக்க ராஜாக்கள் இலேசுப்-பட்டவர்கள் அல்லர். யானைகளைப் பிடிக்கவும் ஆட்சியைப் பிடிக்கவும் அருமை-யாகக் குழி வெட்டுவார்கள். வெட்-டிய குழியில் ரத்த சொந்தங்-களை வெகு அநாயாசமாக எரு-வாகப் போடுவார்கள். யாரைக் குறித்தும் தப்புக்கணக்குப் போடாதே. நம் சண்டையும் சமாதானமும் ஐரோப்பிய அரசியல் சூழல் சார்ந்தது. நமது ஒப்பந்தங்கள் மாய யதார்த்த வகையைச் சேர்ந்தவை. இங்கு அப்படியல்ல. இவர்கள் அப்படியல்ல. போர்த்துக்கீசியர் காலத்தி-லிருந்து போராடிக்கொண்டிருப்பவர்கள். மண்ணின் மக்கள். அத்தனை சுலபத்தில் விட்டுக்கொடுக்கமாட்-டார்-கள். ஆனாலும் முயற்சி செய். உனக்கு என் வாழ்த்துகள்.
திருகோணமலை கடலோரம் முதன்முதலில் வந்து இறங்கிய பிரிட்டிஷ் படைகளுக்கு, கடலோர டச்சுக்-கோட்டைகள் முதலில் கிடைத்தன. டச்சுக்காலனிகள் அனைத்தும் பிரிட்டன் வசமாயின. கிழக்கிலிருந்து மேற்காக, ஒரு தோசையைத் திருப்பிப் போடுவதுபோல எல்லை முழுதையும் தமதாக்கிக்கொண்ட பிற்பாடு அவர்கள் கண்டியைக் குறிவைத்தார்கள்.
வருடம் 1803. கண்டிப் பேரரசின் அப்போதைய மன்னர் பெயர் ஷ்ரீவிக்கிரம ராஜசிங்கே. (ளீவீஸீரீ ஷிக்ஷீவீ க்ஷிவீளீக்ஷீணீனீணீ ஸிணீழீணீவீஸீலீமீ) முன்னோர் வழியில் முக்கால்வாசி தமிழ் ரத்தம் கொண்டவர். அதனால் இல்லை என்றாலும் மன்னர்பிரானுக்குப் பிராந்தியத்தில் நிறைய எதிரிகள் இருந்தார்கள். குறிப்பாக, அவரது ஆட்சியில் இருந்த அதிகார வர்க்கத்தினர் பலர் ஒன்று சேர்ந்து மன்னரைக் கவிழ்க்க சமயம் பார்த்துக்கொண்டிருந்-தார்கள்.
கடலோரத்தில் வந்து முகாமிட்டிருந்த பிரிட்டிஷ் படைகளைத் தொடர்புகொண்டார்கள். பேசியது, மன்னரின் அமைச்சர் ஒருவரே!
இதோ பாருங்கள். நாங்கள் ஒரு ராணுவப் புரட்சி செய்யப்போகிறோம். விக்கிரம ராஜசிங்கேவை வீழ்த்து-வதுதான் குறி. உங்களுக்கும் அதுதான் இலக்கு என்று தெரியும். அர்த்தமின்றி உங்களுடன் மோதிக்-கொண்-டிருக்க நாங்கள் தயாரில்லை. இஷ்டமிருந்தால் எங்க-ளுடன் வருக. வழி காட்டத் தயார். நீங்கள் கட-லோரம் காலாற நடப்பது போல் இல்லை இது. மத்திய இலங்கை-யின் மலைப்பகுதியில் உங்கள் படைகள் ஏறி வருவதற்-குள் நாக்கு தொங்கிவிடும். இத்தனை நூற்-றாண்டு-களா-கக் கண்டிப் பேரரசு மட்டும் பிழைத்துக் கிடக்கிறது என்றால் காரணம் எதுவாயிருக்கும் என்று அப்புறம் யோசித்துக் கொள்ளுங்கள். இப்போது அவசரம். புறப்படலாமா?
இந்தப் பசுமைத் தாயக துரோகம் அறிந்து மன்னர்-பிரான், சம்பந்தப்பட்ட அமைச்சரின் குடும்பத்தினரைக் கையோடு கழுவில் ஏற்றியது ஒருபுறமிருக்க, பிரிட்டிஷ் படைகள் இரண்டு திசைகளி-லிருந்து கண்டியை நோக்கிப் புறப்பட்டன. கொழும்பு-விலிருந்து ஒரு படை. மேஜர் ஜெனரல் ஹே மெக்டவல் (பிணீஹ் விணீநீபீஷீஷ்மீறீ) தலைமையில் அது புறப்பட்டபோதே, திருகோணமலை-யி-லிருந்து கர்னல் பார்பட் (சிஷீறீஷீஸீமீறீ ஙிணீக்ஷீதீ௭) என்பவர் தலைமையில் இன்னொரு படை.
இதில் முக்கியமான விஷயம் என்னவென்றால், இந்த பிரிட்டிஷ் படைகளில் கண்டிப் பேரரசின் மூன்று தனிப் படைகளும் தங்களை இணைத்துக்-கொண்-டிருந்ததுதான். முஸ்லிம்கள் நிறைந்த முதலாம் சிலோன் ரெஜிமெண்ட், சிங்களர்கள் மட்டுமே இருந்த இரண்-டாம் சிலோன் ரெஜிமெண்ட், கலந்து கட்டிய மூன்றாம் சிலோன் ரெஜிமெண்ட்.
கண்டி மன்னரின் ஆட்சி எப்படி இருந்தது, ஏன் அவருக்கு அத்தனை எதிரிகள், எதனால் ஒழிக்கப் -பார்த்-தார்கள் என்பதெல்லாம் மிகப்பெரிய கதை. கண்டியை ஆண்ட மன்னர்களின் கதையை விரிவாக எழுதப் போனால் அது ஒரு தனிக்காவியமாகிவிடும். இடம் காணாது. தவிரவும் நமக்கு அநாவசியம். மன்னர்-களல்ல; நமக்குக் கண்டி மட்டுமே முக்கியம். மத்திய இலங்கை-யின் மலைகள் முக்கியம். அந்த மண்ணின் வளம் முக்கியம். அதைக் கைப்-பற்றப் போகிற பிரிட்டி-ஷார் அங்கே காப்பி பயிரிடலாம் என்று முதன் முதலில் முடிவு செய்த கணம் முக்கியம். இலங்கை-யின் ஆதித் தமி-ழர்கள், பத்-தாம் நூற்-றாண்டுக்குப் பிந்தைய முஸ்-லிம் தமிழர்-களோடு-கூட, இன்னோர் இனமாக உருவெடுக்க இருக்கின்ற மலை-யகத் தமிழர்களின் வாழ்வோடு தொடர்பு-டைய நிலம் அது. எனவே சுருக்கமாக இந்த சண்டைக்-காட்சியை மட்டுமாவது பார்த்துவிடு-வோம்.
முதலாம் கண்டி யுத்தம் என்று சொல்லப்படும் இந்தப் போர் மிகக் கோரமானது. உள்நாட்டு துரோகம், அந்நியப் படையெடுப்பு, போதிய ஆள் பலமின்மை ஆகிய காரணங்களால் மன்னர் விக்கிரம ராஜசிங்கே தோற்றுப் பிடிபட்டது பெரிய விஷயமல்ல. எத்தனை உயிரிழப்புகள்!
பிரிட்டிஷ் தளபதிகள் முத்துசாமி என்கிற பொம்மை மன்னர் ஒருவரை ஆட்சியில் அமர-வைத்-தார்கள். அவரும் ராஜ குடும்பத்து வழி வந்தவர்தான். விக்கிரம ராஜசிங்கேவுக்கு உறவுக்காரர். ஆட்சிக் கனவுடன் இந்தக் கவிழ்ப்பு நடவடிக்கை-யில் தீவிரம் காட்டி-யவர். ஆனால் மக்கள் செல்வாக்கு கிடை-யாது. சிங்கள, - தமிழ் இன வேறு-பாடு-கள் தலைகாட்-டாத காலத்-தில் இரு தரப்-பினராலும் வெறுக்கப்-பட்டவர்.
எனவே, ஆட்சி மாற்றத்துக்குப் பிறகும் யுத்தம் தொடர்ந்தது. இம்முறை கெரில்லா யுத்தம். முத்து-சாமி-யையும் அவருக்கு உதவும் பிரிட்டிஷ் படைகளையும் விரட்டுவதன் பொருட்டு எதிர்த்-தரப்புப் படையினர் ஆரம்பித்து வைத்த யுத்தம்.
பிரிட்டிஷ் படையினரால் இதனைத் தாக்குப் பிடிக்க முடியவில்லை. மலைப்பகுதி. வழி தெரியாத இடம். எப்போதும் மழை. எங்கு பார்த்தாலும் சரிவுகள். திடீர் திடீரென்று தாக்கினார்கள் கண்டி வீரர்கள். ஆக்ரோஷமான, காட்டுமிராண்டித்-தன-மான தாக்குதல். கண்ணில் தென்பட்ட பிரிட்டிஷ் வீரர்கள் அத்தனை பேரையும் கண்டந்துண்டமாக வெட்டிப்போட்டார்கள். வில், வேல், அம்பு, ஈட்டி, பாரைகள் முதல் பிரிட்டிஷாரிடமிருந்தே பறித்த துப்பாக்கிகள் வரை கையில் கிடைத்ததெல்லாம் அவர்-களுடைய ஆயுதமாயின.
பிப்ரவரி 1803_ல் கண்டியில் பிரிட்டிஷ் படைகள் ஆட்சி மாற்றம் செய்தன. அடுத்த மாதமே இந்த எதிர்த்தாக்குதல்கள் தீவிரமடைந்து, பிராந்-தியத்தில் இருந்த ஒரு பிரிட்டிஷ் வீரரை-யும் விடாமல் கொன்று குவித்தனர் கண்டி வீரர்கள். கர்னல் பார்-பட் கைது செய்யப்பட்டு, தூக்கிலிடப்-பட்டார்.
ஜார்ஜ் பான்ஸ்லே என்கிற ஒரே ஒரு பிரிட்டிஷ் வீரர் மட்டும்தான் அந்த யுத்தத்தில் உயிர் பிழைத்து ஓடி வந்தது. அவர் சொன்னக் கதை-களின் மூலம்தான் மலைக்காடுகளில் நடந்த சம்பவங்-களே பிரிட்டிஷா-ருக்குத் தெரியவந்தன. விக்கிரம ராஜ-சிங்கே மீண்டும் மன்னராகிவிட்டாரா? ஆடிப்-போனார்கள்.
பிறகு மீண்டும் பதிலுக்கு பதிலாக அடுத்த தாக்கு-தல். மேலும் உயிரிழப்புகள். இழந்ததை மீட்கும் வெறி. படைகள், படைகள், மேலும் படைகள். குவித்துக்-கொண்டே இருந்-தார்கள். 1805 வரை நீண்ட இந்த யுத்-தத்தின் இறுதியில் குறிப்-பிடும்-படியான ஒப்பந்-தங்--களோ, முடிவோ ஏற்பட-வில்லை. இலங்கைக்-கான பிரிட்டிஷ் கிழக்கிந்திய கம்பெனியின் கவர்னராக நியமிக்கப்பட்ட ஜெனரல் தாமஸ் மெயிட்லண்ட் (நிமீஸீமீக்ஷீணீறீ ஜிலீஷீனீணீ விணீவீறீணீஸீபீ) தினசரி ஆபீஸுக்குப் போய் தன் கடமைகளை ஆற்றத் தொடங்-கி-னார். எதிர்ப்பு-கள் இருந்தாலும் முழு இலங்கைத் தீவும் தன்னு-டையது என்று பிரிட்டிஷ் கிழக்கிந்திய கம்பெனி சொல்லாமல் சொன்னது. ஏற்க விருப்ப-மில்லா-விட்-டாலும் மக்கள் அமைதியாகக் கேட்டுக்-கொண்-டார்கள்.
1815_ல் மீண்டும் கண்டி யுத்தம் ஆரம்பமானது. இரண்டாம் கண்டி யுத்தம் இது. ஒருமுறை பட்ட அவமானத்துக்குப் பிறகு களமிறங்கிய பிரிட்டிஷ் படைகள் இம்முறை அதிக சிரமப்பட நேரவில்லை. இம்முறையும் சிலர் மன்னரைக் காட்டிக்கொடுத்தார்-கள். இம்முறையும் மன்னர் படைகள் இரண்டாகப் பிரிந்தன. இம்முறையும் நிறைய உயிர்ச்சேதம். இம்-முறையும் மன்னர் பிடிபடவே செய்தார்.
ஆனால் இன்னொரு வாய்ப்பு அவருக்குக் கிடைக்கவில்லை. கைது செய்த கையோடு பிரிட்டி-ஷார் அவரை தமிழகத்துக்குக் கொண்டுவந்து-விட்-டார்கள். வேலூர் கோட்டையில் விக்கிரம ராஜ-சிங்கே சிறைவைக்கப்பட்டார். துணைக்கு அவருடைய இரண்டு மனைவிகள். செலவுக்குக் கொஞ்சம் பணம். அவ்வளவுதான்.
தனது ஐம்பத்திரண்டாவது வயது வரை வாழ்ந்து, தமிழகத்தில் மரித்துப் போன விக்கிரம ராஜசிங்கேதான் இலங்கையின் கடைசி சுதந்திர மன்னர்.
அதன்பிறகு பரபரவென்று கண்டி நகரையும் சுற்றி-யுள்ள பிராந்தியங்களையும் பிரிட்டிஷ் படைகள் சுற்றி வளைத்து ஆக்கிரமித்துவிட்டன. எதிர்ப்புக் குரல் கொடுத்த அத்தனை பேரையும் கைது செய்தார்கள். விக்கிரம ராஜசிங்கேவின் உறவுக்காரர்கள் அத்தனை பேரையும் நாட்டை விட்டு வெளியேற கெடு கொடுத்-தார்கள். குறிப்பாக, ஆண் உறவுகள் யாரும் இலங்கைக்-குள் இருக்கக்கூடாது என்று சொல்லப்பட்டது. மன்ன-ரின் விசுவாசிகள், வேலைக்காரர்கள், அதிகாரிகள் அத்-தனை பேரும் நாற்பத்தெட்டு மணி நேரத்-துக்குள் காணாமல் போனார்கள். தானாக இடம் பெயர்ந்-தவர்-களை யாரும் ஒன்றும் செய்யவில்லை. தப்-பித்து, அங்கேயே உயிர் வாழ நினைத்த-வர்களை மட்-டும் -தூக்கிக்கொண்டு போய்விட்-டார்கள். பிறகு சிலர் கொல்லப்பட்-டார்கள், சிலர் நாடு கடத்தப்-பட்டார்கள்.
அப்புறமும் ஒன்றிரண்டு புரட்சிகள், மீண்டும் அடிதடி என்று கண்டி ராஜ்ஜியம் மட்டும் ஆன மட்டும் பிரிட்டி-ஷாருக்குத் தண்ணி காட்டிக்-கொண்டுதான் இருந்தது. இன்றைய பதுளை, மொன-ராகலை மாவட்டங்-களை உள்ளடக்கிய ஊவா மாகாணத்-தில் (ஹிஸ்ணீ றிக்ஷீஷீஸ்வீஸீநீமீ) 1817_ம் ஆண்டு ஏற்பட்ட ஒரு புரட்சி இதில் முக்கியமானது. மூன்றா-வது கண்டி யுத்தம் என்று சொல்-லப்படும் இதில், புரட்சியாளர்-கள் மிகத் தீர-மாகப் போராடித் தோற்றுப்-போனார்கள்.
நானூறு வருட கண்டிப் பேரரசின் வீழ்ச்சி, இலங்கை வரலாற்றில் மிக முக்கியமான ஒரு சம்பவம். இலங்கை சரித்திரத்தின் முதல் பாகம், இந்த வீழ்ச்சி-யுடன் முடி-கிறது. மன்னராட்சிக் காலத்தின் முடிவு. போர்த்துக்-கீசியர்களும் ஒல்லாந்தர்கள் என்கிற ஹாலந்துக்-காரர்-களும் பிரிட்டிஷாரும் இடையே வந்து-விட்டார்கள் என்றாலும், கண்டிப்பேரரசு தாக்குப் பிடித்து நீடித்துக்-கொண்டிருந்த விதம் வியப்புக்-குரியது. இத்தனைக்கும் ஏராளமான உள்நாட்டுக் குழப்பங்கள், சண்டை சச்சரவுகள், அடிதடிகள். ராஜ குடும்பத்துக் குழப்-பங்கள் எல்லாம் இடியாப்பச் சிக்கல்கள். ஒருவரை ஒருவர் கடித்துச் சாப்பிட எத்தனை எத்தனை முயற்சிகள் மேற்-கொண்டிருக்கிறார்கள் என்பதற்குக் கணக்கு வழக்கே கிடையாது!
ஆனால் ஒரு விசித்திரம், அதுநாள் வரை ஆட்சிக்-காகவும் அதிகாரத்துக்காகவும் சண்டையிட்டார்களே தவிர, பிரிட்டிஷ் ஆட்சி வந்தபிறகு அத்தனை பேரும் அடங்கிப் போனார்கள். இந்தியாவுக்கு சுதந்திரம் கிடைத்த-தற்கு மறு வருடம்தான் இலங்கைக்குச் சுதந்திரம் கிடைத்தது.
ஆனால் இங்கு நடைபெற்ற சுதந்திரப் போர் போல, இலங்கையில் ஒன்றுமே நடைபெறவில்லை. சுமார் நூற்றைம்பது வருட கால பிரிட்டிஷ் ஆட்சியில் இலங்கை அனுஷ்டித்த அமைதி வியப்புக்குரியது.
அது புயலுக்கு முந்தைய அமைதி என்று அப்-போது யாரும் எண்ணிப் பார்த்திருக்க முடியாது.
(தொடரும்)
நன்றி
குமுதம்
0 விமர்சனங்கள்:
Post a Comment