பதுங்கு குழிக்குள் தங்கியதால் திங்களன்று ஐ.நா. உள்ளூர் பணியாளர் 93 பேர் அருந்தப்பு தலைமையகத்துக்கு தகவல் குறிப்பு அனுப்பப்பட்டது
அரசாங்கம் மக்கள் பாதுகாப்பு வலயமாகப் பிரகடனப்படுத்திய இடத்தின் மீது நடத்தப்பட்ட ஷெல் தாக்குதலில் ஐக்கிய நாடுகள் சபையின் உள்ளூர் பணியாளர்களும் அவர்களது உறவினர்களுமாக 93பேர் மயிரிழையில் தப்பினர்; ஒருவர் காயமுற்றார் என்று தகவல் வெளியாகி உள்ளது.
குறிப்பிட்ட இடங்களை அரசாங்கம் பாதுகாப்பு வலயமாகப் பிரகடனப்படுத்தியதைத் தொடர்ந்து இவர்கள் குறிப்பிட்ட இடத்தில் சென்று தஞ்சம் அடைந்தனர் என்றும்
அவசர அவசரமாக பதுங்குழிகளை அமைத்து அவற்றுக்குள் இருந்தவேளை அருகருகே ஷெல்களும் பீரங்கிரவைகளும் வந்து வீழ்ந்தன என்றும்
ஐ.நாவின் கொழும்பு அலுவலகம் தலைமை அலுவலகத்துக்கு அனுப்பிய தகவல் குறிப்பு ஒன்றில் தெரிவித்திருக்கிறது.
இராணுவம் ஏவிய ஷெல்களாலேயே அங்கு தங்கிய ஏனையோர் காயமுற நேர்ந்தது என்பது நிச்சயம்.விடுதலைப் புலிகள் நடத்திய தாக்குதலுக்கு பதிலடியாக அவை ஏவப்பட்டிருக்கலாம் என்றும் அந்தக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
சில மணி நேரம் கழித்தும் ஐ.நா. உள்ளூர் பணியாளர்கள் ஒதுங்கியிருந்த பதுங்கு குழிக்கு 30 அடி தள்ளி மற்றொரு ஷெல் வீழ்ந்து வெடித்தது என்றும் அப்போது ஒன்பது பேர் கொலையுண்டனர் என்றும் 20 பேருக்கும் அதிகமாகேனார் காயமுற்றனர் என்றும் ஐ.நா. குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை , யுத்தம் நடக்கும் பகுதியில் 15 வயதுக்கு உட்பட்ட 248 பேர் உட் பட 1,140 பேர் காயமடைந்துள்ளனர் என டாக்டர் துரைராஜா வரதராஜா ஏ.பி. செய்தி நிறுவனத்துக்கு தெரிவித்துள்ளார்.
அங்கு இடம்பெறும் சண்டைகாரணமாக கொல்லப்பட்ட மற்றும் காயமடைந்தவர்களை இனங்காண முடியாதுள்ளதாக அவர் தெரிவித்தார். அதனால் கொல்லப் பட்டவர்களின் எண்ணிக்கை சரியாக கணக்கிட முடியாதுள்ளது என்றும் அவர் தெரிவித்தார்.
கடந்த திங்கட்கிழமை தனது கருத்துப் படி 250 முதல் 300 பேருக்கும் அதிகமானோர் கொல்லப்பட்டுள்ளனர் என்றும் அவர் கூறினார்.
0 விமர்சனங்கள்:
Post a Comment