புலிகளுக்கு எதிரான போர் 99 வீதம் முடிந்துவிட்டதாம்
தமிழீழ விடுதலைப் புலிகளுக்கெதிரான போரில் 99 சதவீதம் முடிவுற்றுள்ளது. இன்னும் ஒரு வீதம் மட்டுமே எஞ்சியிருக்கிறது. இவ்வாறு தெரிவிக்கிறார் பாதுகாப்புத்துறைப் பேச்சாளரான அமைச்சர் ஹெகலிய ரம்புக்வெல.
கண்டி மாவட்டம் குண்டசாலையில் புதிய வர்த்தக நிலையம் ஒன்றின் கட்டடத்தைத் திறந்து வைத்துபேசுகையிலேயே அமைச்சர் இவ்வாறு கூறினார்.
ஒரு சில சதுர மீற்றர் நிலப்பரப்பே இப்போது விடுதலைப் புலிகள் வசம் உள்ளது. அதையும் இன்னும் சில நாள்களில்எமது பாதுகாப்புப் படையினர் கைப்பற்றிவிடு வர்திட்டமிட்டவாறு வடக்கில் இப்போது அச்சொட்டாகபடைநடவடிக்கை முன்னேனற்றம் அடைந்து வருகிறது.
போரில் இப்போது நாம் அடைந்துள்ள வெற்றிக்கு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் அதி சிறந்த திட்டமிடலேகாரணம் என்று அமைச்சர் ரம்புக்வெல திறப்பு விழாப் பேச்சில் குறிப்பிட்டார்.
0 விமர்சனங்கள்:
Post a Comment