ஜப்பானின் விசேட தூதுவர் அகாஷி கிழக்கு மாகாண முதல்வருடன் சந்திப்பு (படங்கள்)
இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டுள்ள ஜப்பானின் விசேட தூதர் யசூசி அகாஷி கிழக்குமாகாண முதலமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தனை நேற்றுச் சந்தித்துக் கலந்துரையாடினர்.வவுனியா விஜயத்தை முடித்துக் கொண்டு திருகோணமலை சென்ற அவர் முதலமைச்சர் மற்றும் அதிகாரிகளுடன் கலந்துரையாடினார்.கிழக்கில் மேற்கொள்ள வேண்டிய அபிவிருத்தி மற்றும் புனர்வாழ்வுப் பணிகள் குறித்து இச்சந்திப்பில் ஆராயப் பட்டதாகத் தெரிவிக்கப்பட்டது. இதற்கு முன்னதாக அகாஷி நேற்று வவுனியாவுக்குச் சென்றிருந்தார்.
ஹெலி மூலம்வன்னி சென்ற அவரை வன்னிக்கட்டளைத் தளபதி வரவேற்றார்.வன்னியில் இருந்து வவுனியாவுக்கு வந்து முகாம்களில் தங்கியுள்ள மக்களை அவர் பார்வையிட்டு அவர்களின் பிரச்சினைகள் தொடர்பாகக் கேட்டறிந்தார்.விசேட தூதுவர் இன்று கொழும்பில் செய்தியாளர் மாநாட்டை நடத்த விருக்கிறார்.
0 விமர்சனங்கள்:
Post a Comment