யுத்தம் முடிந்ததும் படையினர் அபிவிருத்தி நடவடிக்கையில்
பயங்கரவாதத்திற்கெதிரான யுத்தத்தில் ஈடுபட்டுள்ள படையினர் அனைவரையும் யுத்தம் நிறைவடைந்ததும் நாட்டின் அபிவிருத்தி நடவ டிக்கைகளில் ஈடுபடுத்து வதே அரசாங்கத்தின் நோக்க மாகுமென அமைச்சர் மைத்திரி பால சிறிசேன தெரிவி த்தார்.
யுத்தம் நிறைவடைந் ததும் தெற்கின் தேவேந்திர முனையிலிருந்து வடக்கின் பருத்தித்துறை வரையிலான முழுநாடும் அபிவிருத்திக் குள்ளாக்கப்படும் அதற்காக யுத்தத்தில் ஈடுபட்ட சகல படையினரும் பயன்படுத்த ப்படுவார்கள். எனவும் அமைச்சர் தெரிவித்தார்.
எதிர்க்கட்சியினர் இது விடயத்தில் தேவையற்ற விமர்சனங்களை மேற்கொண்டு வருகின்றனர். அரசாங்கம் யுத்தம் நிறைவடைந்ததன் பின் அரசியலமைப்புக்கிணங்க முறையான எதிர்கால நடவடிக்கையை மேற்கொள்ளுமெனவும் அமைச்சர் தெரிவித்தார்.
கொழும்பு மஹாவலி கேந்திர நிலையத்தில் நேற்று இடம்பெற்ற செய்தியாளர் மாநாட்டின் போது ஊடகவியலாளர் ஒருவர் எழுப்பிய கேள்வியொன்றுக்குப் பதிலளிக்கும் போதே அமைச்சர் இதனைத் தெரிவித்தார்.
யுத்தத்தை முடிவுக்குக் கொண்டு வந்த பின் அரசாங்கம் வெற்றிகரமான செயற்திட்டங்கள் பலவற்றை முன்னெடுக்கவுள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.
0 விமர்சனங்கள்:
Post a Comment