போலிக் கடவுச்சீட்டை பயன்படுத்தி ஜேர்மன் செல்ல முயன்ற பெண்ணுக்கு பிணை
போலி கடவுச்சீட்டைப் பயன்படுத்தி ஜேர்மன் நாட்டுக்கு செல்ல முயன்ற பெண் ஒருவருக்கு நிர்கொழும்பு பிரதான நீதிவான் ஜயகி த அல்விஸ் 50 ஆயிரம் ரூபா அபராத?ம் 10 வருடகாலம் ஒத்திவைக்கப்பட்ட இருவருட கடூழியச்சிறைத் தண்டனையும் விதித்து தீர்ப்பளித்தார்.
யாழ்ப்பாணம், கரவெட்டியைச் சேர்ந்த பெண் ஒருவருக்கே நீதிவான் மேற்படி தண்டனையை விதித்தார்.
பிரதிவாதி 2005 ஆம் ஆண்டு போலி கடவுச்சீட்டைப் பயன்படுத்தி கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தினூடாக ஜேர்மன் நாட்டுக்கு செல்ல முற்பட்ட போது, விமானநிலைய குற்றப்புலனாய்வு திணைக்கள பிரிவினரால் கைது செய்யப்பட்டிருந்தார்.
ஜேர்மன் நாட்டில் வசிக்கும் கணவரிடம் செல்வதற்காக பிரதிவாதி ஜேர்மன் செல்ல முயன்றதாகவும் அங்கு சென்றதன் பிறகு இவரை வெளிநாட்டுக்கு அனுப்ப உதவிய இலங்கையைச் சேர்ந்த முகவருக்கு 21 இலட்சம் ரூபா பணத்தை வழங்க ஒத்துக் கொண்டு இருந்ததாகவும் அதன்படி போலி கடவுச் சீட்டை பயன்படுத்தி ஜேர்மன் செல்ல முயன்றதாகவும் விசாரணைகளின் போது பிரதிவாதி தெரிவித்துள்ளார்.
0 விமர்சனங்கள்:
Post a Comment