கிழக்கு மாகாண முதல்வர் தலைமையில்
கிழக்கு மாகாண முதலமைச்சரின் மட் டக்களப்பு வாசஸ்தலத்தில் வன்னியிலி ருந்து இடம்பெயரும் மக்களுக்கென ஒரு தொகுதி நிவாரணப் பொருட்கள் த.ம.வி.பு கட்சியின் முக்கியஸ்த்தர்கள் உள்ளூராட்சி ஆணையாளர் மற்றும் உதவி உள்ளூராட்சி ஆணையாளர் ஆகி யோரிடம் கையளிக்கப்பட்டன.
இந்நிகழ்வில் கருத்துத் தெரிவித்த கிழக்கு மாகாண முதல்வர் சந்திரகாந்தன்.
மனிதாபிமான அடிப்படையில் எமது கட்சி பல்வேறு சமூக உதவிகளை வழ ங்கி வருகின்றது. அதன் அடிப்படையில் எமது உறவுகள் பயங்கரவாதிகளின் பிடியி லிருந்து தப்பித்து அரச கட்டுப்பாட்டுப் பகுதிக்கு வருகின்றார்கள்.
இவர்களு க்குரிய அத்தியாவசியத் தேவையாக உள்ள உதவிகளை நாம் வழங்குவதற்கு எமது கிழக்கு மாகாண சபை அமைச்சர் வாரியம் முடிவெடுத்தது. அதனடிப்படையில் கிழக்கில் இருக்கின்ற யாராக இருந்தாலும் தங்களது உதவிகளை வடபகுதி மக்களுக்கு வழங்க வேண்டும் என நினைப்பவர்கள் எமது மட்டக்களப்பு மாவட்ட உள்ளூராட்சி ஆணையாளர் மற்றும் பிரதேச சபை செயலாளர்களிடம் ஒப்படைத்து பற்றுச் சீட்டினைப் பெற்றுக் கொள்ளலாம்.
இந் நிகழ்வில் கட்சியின் மாகாண சபை உறுப்பினர்களான திரவியம் (ஜெயம்) மற்றும் பிரதீப் மாஸ்டர் ஆகியோரும் கலந்துகொண்டனர்.
0 விமர்சனங்கள்:
Post a Comment