ஒபாமா நிர்வாகத்தில் இந்திய வம்சாவளி பெண்ணுக்கு முக்கிய பதவி
வாஷிங்டன்: இந்திய வம்சாவளியைச் சேர்ந்த பிரபல பெண் வக்கீல் ப்ரீதா பன்சாலுக்கு அமெரிக்காவில் முக்கிய பதவி கொடுக்கப் பட்டுள் ளது.அமெரிக்காவில் ஆட்சி மாற்றம் சுமுகமாக நடப்பதற்காக அமைக்கப்பட் டுள்ள ஆட்சி மாற்றக் குழு, ஒபாமா உத்தரவின் பேரில் நேற்று சில முக்கிய நடவடிக்கைகளை எடுத்தது. ஒபாமா தலைமையிலான நிர்வாகத்தில் பணியாற்றுவதற்காக பல்வேறு துறைகளுக்கு புதிய அதிகாரிகள் நியமிக்கப்பட்டனர்.மேலாண்மை மற்றும் நிதி நிலை அறிக்கை துறையின் கொள்கை ஆலோசகராக இந்திய வம்சாவளியைச் சேர்ந்த ப்ரீதா பன் சால் நியமிக்கப்பட் டுள்ளார்.இவர், அமெரிக்காவில் மிகவும் பிரபலமான வக் கீல். 1999-2002 ல் நியூயார்க் மாகாணத்தின் சொலிசிட்டர் ஜெனரலாக பணியாற்றியவர்.இது தவிர, அமெரிக்க சட்டத் துறையிலும் பல முக்கியமான பொறுப்புகளை வகித்த அனுபவமும் ப்ரீதாவுக்கு உண்டு.
0 விமர்சனங்கள்:
Post a Comment