ஒபாமாவின் 'லிங்கன் பைபிள்'
தனது "ஹீரோ' ஆபிரகாம் லிங்கன் பயன்படுத்திய வரலாற்று சிறப்புமிக்க பைபிளின் மீது இடது கையை வைத்து பதவி ஏற்பு உறுதி மொழி ஏற்றார் ஒபாமா. இதன் பின்னணி மிகவும் சுவாரஸ்யமானது. கடந்த 1861, மார்ச் 4ம் தேதி அமெரிக்காவின் அதிபராக லிங்கன் பதவியேற்றார். அப்போது அவரது குடும்ப பைபிள் கிடைக்கவில்லை.
ஸ்பிரிங்பீல்டு வீட்டில் இருந்து வெள்ளை மாளிகைக்கு குடியேறிய பரபரப்பான சூழ்நிலையில் காணாமல் போய்விட்டதாம். உடனே அப்போதைய சுப்ரீம் கோர்ட் பணியாளர் வில்லியம் தாமஸ் கேரல், ஒரு பைபிளை வழங்கியுள்ளார். இதனை பயன்படுத்தி தான் லிங்கன் பதவி ஏற்றுள்ளார். இது ஆக்ஸ்போர்டு பல்கலை கழகத்தால் 1853ல் வெளியிடப்பட்டது. இதன் அட்டை சிவப்பு நிறத்தில் வெல்வெட் துணியால் அலங்கரிக்கப்பட்டிருக்கும். ஓரங்கள் தங்க நிறத்தில் ஜொலிக்கும். 1928க்கு பிறகு "லைப்ரரி ஆப் காங்கிரசுக்கு' இந்த பைபிள் நன்கொடையாக அளிக்கப்பட்டது. இதன் மீது இடது கையை வைத்து நேற்று அமெரிக்காவின் 44வது அதிபராக ஒபாமா பதவி ஏற்றார்.
"லிங்கன் உணவு' :பதவி ஏற்புக்கு பிறகு நடந்த விருந்து நிகழ்ச்சியிலும் லிங்கனுக்கு பிடித்த உணவு வகைகள் இடம் பெற்றன. இதற்கான "மெனுவில்' கடல் உணவுகள், ஆப்பிள் கேக் போன்றவை இடம் பெற்றிருந்தன.
வித்தியாசமான பதவி ஏற்பு : மிகவும் வித்தியாசமான முறையில் பதவி ஏற்றுக் கொண்ட சில அமெரிக்க அதிபர்கள்:
ஜார்ஜ் வாஷிங்டன்(1789-1897): பதவி ஏற்பு விழாவின் போது "கடவுளே எனக்கு உதவி செய்யுங்கள்' எனக் கூறி, பைபிளை முத்தமிட்டார். இந்த முறை தொடர்ந்து பின்பற்றப்பட்டது.
வில்லியம் ஹாரிசன்(1841): பதவி ஏற்பு நிகழ்ச்சியின் போது கடும் குளிரில் 100 நிமிடங்கள் பேசினார். ஒரு மாதத்துக்கு பிறகு இவர் நிமோனியா காயச்சலால் மரணம் அடைந்தார்.
ஆபிரகாம் லிங்கன்(1861-1865): பதவி ஏற்பு அணிவகுப்பின் போது முதல் முறையாக அமெரிக்க-ஆப்ரிக்க படைகள் இணைந்து வந்தன. இதன் மூலம் அடிமைத்தனத்துக்கு சவுக்கடி கொடுத்தார்.
லிண்டன் ஜான்சன்(1963-69): ஜான் கென்னடியின் படுகொலையை தொடர்ந்து பாதுகாப்பு கருதி முதன் முறையாக விமானத்தில் பதவி ஏற்றார். குண்டு துளைக்காத காரில் முதன் முறையாக பவனி வந்தார்.
ஒபாமா(2009-): பதவி ஏற்பு விழாவை காண அதிக மக்கள் கூடியது சிறப்பம்சம். சுமார் 20 லட்சத்துக்கும் அதிகமானோர் திரண்டதாக கூறப்படுகிறது.
0 விமர்சனங்கள்:
Post a Comment