சதாம் குசைன் போல, பிரபாகரன் ஒழிந்திருக்கப் போவதில்லை
விடுதலைப் புலிகளின் தலைவர் வே.பிரபாகரன் தனது குடும்பத்துடன் ஏற்கனவே நாட்டைவிட்டு வெளியேறியிருப்பார் என எதிர்பார்ப்பதாக இராணுவத் தளபதி லெப்டினட் ஜென்ரல் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்.
ஈராக்கின் முன்னாள் ஜனாதிபதி சதாம் குசைன் போல, பிரபாகரன் ஒழிந்திருக்கப் போவதில்லையென இராணுவத் தளபதி கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் கூறினார்.
“தனது குடும்பம் மற்றும் உணவை விரும்பும் ஒருவரே பிரபாகரன். அவ்வாறான ஒருவர் தற்கொலை செய்துகொள்ளமாட்டார். அவ்வாறு அவர் செய்ய விரும்பினாலும் குடும்பத்தினர் அவரை அவ்வாறு செய்ய அனுமதிக்கமாட்டார்கள்” என்றார் அவர்.
ஒரு மில்லியன் அமெரிக்க டொலர்களை வழங்கினால் பிரபாகரனை வெளிநாட்டுக்குள் அழைத்துச் செல்வதற்குப் பல அமைப்புக்கள் தயாராக இருப்பதாகவும் இராணுவம் தளபதி குற்றஞ்சாட்டினார்.
மலேசியா, பர்மா, கம்போடியா மற்றும் தென் ஆபிரிக்கா ஆகிய நாடுகளுக்குப் பிரபாகரன் சென்றிருக்கலாம் எனவும் சரத் பொன்சேகா சந்தேகம் வெளியிட்டார்.
0 விமர்சனங்கள்:
Post a Comment