புளியம்பொக்கணைப் பிரதேசத்தையும் படையினர் கைப்பற்றியுள்ளனர்
வன்னியில் இடம்பெற்றுவரும் மோதல்களில் தமது மொத்த இடங்களையும் இழந்த புலிகள் இறுதியாக அமைத்திருந்த பாதுகாப்பரணையும் உடைத்தெறிந்து புலிகளின் பலத்த எதிர்ப்புக்கு மத்தியில் முன்னேறிய படையினர் தர்மபுரம் பிரதேசத்திற்கு பின்புறமாக காணப்படும் நெத்தலியாற்றைக் கடந்து புளியம்பொக்கணைப் பிரதேசத்தைக் கைப்பற்றியுள்ளனர்.
கடந்த காலங்களில் தொடர்ந்து பின்வாங்கிச் சென்ற புலிகளின் இறுதி நிலையாக இப்பிரதேசம் விளங்கியதற்கான சான்றுகள் பல அங்கு காணப்படுவதாக தெரியவருகின்றது. அங்கு பல களஞ்சியங்கள் காணப்படுவதாகவும் அங்கு காணப்படும் பொருட்கள் யாவும் அரசசார்பற்ற நிறுவனங்களாலும் அரசினாலும் மக்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டிருந்த பொருட்கள் என்றும் அவை அப்பிரதேச மக்களைச் சென்றடைய விடாத புலிகள் அவற்றை தாம் கைப்பற்றி களஞ்சியப்படுத்தியிருந்தமை தெரியவந்துள்ளது.
பிரதேசத்தில் காணப்படும் சகல அரச அலுவலகங்களையும் புலிகள் தமது தேவைகளுக்காக பயன்படுத்தியுள்ளமையும் அங்கு பாதுகாப்பரண்களை அமைத்து வைத்திருந்தமையும் கண்டு பிடிக்கப்பட்டுள்ளது.
0 விமர்சனங்கள்:
Post a Comment