திருமாவளவனின் உண்ணாநோன்பு குறித்து கருணாநிதி விமர்சனம்
விடுதலைச் சிறுத்தைகள் தலைவர் தொல்.திருமாவளவன் தன்னிச்சையாக காலவரையற்ற உண்ணாநோன்பைத் துவக்கிவிட்டார் என்றும், இலங்கைத் தமிழர் பிரச்சினையில் அடுத்து மத்திய அரசு என்ன செய்யவிருக்கிறது என்பதை சில நாட்கள் பொறுத்திருந்து பார்க்கலாம் என்றும் தமிழக முதல்வர் கருணாநிதி கூறி இருக்கிறார்.
இலங்கையில் போர் நிறுத்தம் கோரி திருமாவளவன் நேற்று சென்னையை அடுத்த மறைமலை நகரில் உண்ணாவிரதத்தை துவக்கியுள்ளார்.
இதுவரை திருமாவளவனின் போராட்டம் குறித்து எவ்வித கருத்தும் தெரிவிக்காமல் இருந்த முதல்வர் கருணாநிதி, தனது கட்சியனருக்கு எழுதியுள்ள பகிரங்க கடிதத்தில் சில நாட்கள் முன்பு திருமாவளவன், பாட்டாளி மக்கள் கட்சித் தலைவர் டாக்டர் ராமதாஸ் மற்றும் திராவிடர் கழகச் செயலாளர் வீரமணி தன்னை வந்து சந்தித்தபோது மத்திய அரசிடமும், காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியிடம் பிரச்சினை குறித்து பேசுவதாக வாக்களித்தும், தன்னிச்சையாக திருமாவளவன் உண்ணாநோன்பில் இறங்கிவிட்டார் என்று விமர்சித்துள்ளார்.
0 விமர்சனங்கள்:
Post a Comment