வன்னியில் தொடரும் எறிகணை மற்றும் விமானத் தாக்குதலையடுத்து மக்கள் விசுவமடு நோக்கி இடம்பெயர்வு
வன்னிப்பகுதியில் இடம்பெற்று வரும் தொடர்ச்சியான எறிகணை மற்றும் விமானத் தாக்குதல்கள் காரணமாக அங்கு மக்கள் மத்தியில் பெரும் பதற்ற நிலைமை தோன்றியிருப்பதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
கொட்டும் மழைக்கு மத்தியிலும் கிளிநொச்சி மாவட்டத்தின் கிழக்குப் பிரதேச மக்கள் விசுவமடு பகுதியை நோக்கி பெரும் எண்ணிக்கையில் இடம்பெயர்ந்து ஓடிக்கொண்டிருப்பதாகக் கூறப்படுகின்றது.
இந்தத் தாக்குதல்களினால் பொதுமக்கள் மத்தியில் உயிரிழப்புக்கள் அதிகரித்துள்ளதுடன், பலரும் காயமடைந்து வருவதாகவும், அங்குள்ள சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
கடந்த நவம்பர் மாதத்திலிருந்து இன்று வரையிலான காலப்பகுதியில் கிளிநொச்சி மாவட்டத்தில் மாத்திரம் 6 குழந்தைகள் உட்பட 29 சிவிலியன்கள் உயிரிழந்துள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்தத் தாக்குதல்களில் 36 பிள்ளைகள் உட்பட 200 பேர் காயமடைந்திருப்பதாகவும் தகலவல்கள் தெரிவிக்கின்றன.
வீரகேசரி இணையம்
0 விமர்சனங்கள்:
Post a Comment