எரிக் சொல்ஹெய்மின் கோரிக்கை அரசாங்கத்தால் நிராகரிப்பு
வன்னியில் மோதல் பிரதேசத்திற்கு சர்வதேச கண்காணிப்பாளர்களை அனுப்பி வைக்குமாறு நோர்வேயின் சர்வதேச விவகார அமைச்ச்ர எரிக் சொல்ஹெய்ம் விடுத்த வேண்டுகோளை இலங்கை அரசாங்கம் நிராகரித்துள்ளது.
முல்லைத்தீவு மோதல்களில் அதிக பொதுமக்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்து எரிக் சொல்ஹெய்ம் இந்த கோரிக்கையை விடுத்திருந்தார்.
இதேவேளை, வன்னி மோதல்கள் நிறுத்தப்பட வேண்டுமென நோர்வேயின் வெளிவிவகார அமைச்சர் ஜொனாஸ் ஸ்டோரே இலங்கை அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்துள்ளார். எனினும், இந்தக் கோரிக்கையை அரசாங்கம் முழுமையாக நிராகரித்துள்ளது.
0 விமர்சனங்கள்:
Post a Comment