தடை செய்யப்பட்ட விடுதலைப்புலிகளுடன் உள்நாட்டு, வெளிநாட்டு தொண்டு நிறுவனங்களின் தொடர்புக்கு தடை
விடுதலைப்புலிகள் மீது தடைவிதிக்கப்பட்டதை தொடர்ந்து உள்நாட்டு, வெளிநாட்டு தொண்டு நிறுவனங்கள் விடுதலைப்புலிகள் அமைப்பு மற்றும் அதன் 45 துணை நிறுவனங்களுடன் தொடர்புகளை கொண்டிருப்பது முற்றாக தடைசெய்யப்பட்டுள்ளது.
சில சர்வதேச நிறுவனங்கள் விடுதலைப்புலிகளுடன் புரிந்துணர்வு உடன்படிக்கைகளை கைச்சாத்திட்டுள்ளமை குறித்த தகவல்கள் அரசாங்கத்திற்கு தெரியவந்ததை அடுத்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இந்தத் தடையை மீறி செயற்படும் சர்வதேச நிறுவனங்கள் நாட்டில் இருந்து வெளியேற்றப்படும் என அரசாங்கத்தின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
கடந்த காலங்களில் இந்த சர்வதேச நிறுவனங்கள் விடுதலைப்புலிகளின் தலைவர்களுடனும் பேச்சுவார்த்தைகளை நடத்தியிருந்தன. சில நிறுவனங்களின் தலைவர்கள் கிளிநொச்சி செல்வதாக கூறி, அங்கு சென்று விடுதலைப்புலிகளின் தலைவர்களை சந்தித்து ரகசிய பேச்சுவார்த்தை நடத்தியுள்ளதாகவும் அரச தரப்பு குற்றம்சுமத்தியுள்ளது.
0 விமர்சனங்கள்:
Post a Comment