பிரபாகரனை பிடிப்பது என்பதும் அவரை இந்தியாவிடம் ஒப்படைப்பது என்பதும் நடைமுறை சாத்தியமில்லாதது: இல.கணேசன்
கிளிநொச்சியை இழந்தது விடுதலைப் புலிகளுக்கு பின்னடைவாக இருக்கலாம். ஆனால், அதனாலேயே அவர்கள் தோற்றுவிட்டார்கள் எனக் கூற முடியாது. பிரபாகரனை பிடிப்பது என்பதும், அவரை இந்தியாவிடம் ஒப்படைப்பது என்பதும் நடைமுறை சாத்தியமில்லாதது என்று தமிழக பாஜக தலைவர் இல.கணேசன் தெரிவித்தார்.
மயிலாப்பூர் சட்டப்பேரவை தொகுதி பா.ஜ.க. மாநாடு ஞாயிற்றுக்கிழமை சென்னையில் நடைபெற்றது. அம்மாநாட்டின்போது செய்தியாளர்களிடம் இல. கணேசன் கூறியதாவது:-
கிளிநொச்சி வீழ்ந்துவிட்டாலும், விடுதலைப்புலிகள் தோற்றுவிட்டார்கள் என்று கூற முடியாது.
இலங்கையில் இருந்து அகதிகளாக வந்துள்ள 1 இலட்சத்துக்கும் மேற்பட்ட தமிழ் மக்களை பராமரிக்கும் பொறுப்பு இந்தியாவின் மீது சுமத்தப்பட்டுள்ளது. எனவே இலங்கை இனப் பிரச்சினையை, அந்நாட்டின் உள்நாட்டுப் பிரச்சினையாகக் கருத முடியாது.
எனவே இந்திய அரசு உடனடியாக தலையிட வேண்டும். அங்குள்ள தமிழ் மக்களுக்கு சம உரிமை என்பது அவர்களின் பிறப்புரிமை. அதை இலங்கை அரசிடம் பிச்சை கேட்பது போல் கேட்க வேண்டிய நிலை தமிழர்களுக்குக் கூடாது. தமிழர்களுக்கு உரிய உரிமைகள் உடனடியாக வழங்கப்பட வேண்டும் என்றார் இல. கணேசன்.
Tamilwin






0 விமர்சனங்கள்:
Post a Comment