இந்தியாவின் கரிசனை அப்பாவித் தமிழ் மக்கள் மீது மட்டுமே
இந்திய வெளிவிவகார அமைச்சர் பிரணாப் முகர்ஜி நேற்று அவசர விஜயம் ஒன்றை மேற்கொண்டு இலங்கை வந்திருந்தார். இலங்கையின் அண்மைக்கால நிலவரங்கள்;, இந்திய - இலங்கை உறவுகள் உள்ளிட்ட பல்வேறு விடயங்கள்; தொடர்பாக ஜனாதிபதியுடன் இந்திய வெளிவிவகார அமைச்சர் கலந்துரையாடினார். இச்சந்திப்பு ஜனாதிபதி மாளிகையில் நேற்றிரவு இடம்பெற்றது.
இலங்கையின் அண்மைக்கால நிலவரங்கள், அபிவிருத்திகள் தொடர்பான ஜனாதிபதியுடனான சந்திப்பு மிகவும் பயனுள்ள வகையிலும் இருதரப்புக்குமிடையே மிகுந்த புரிந்துணர்வுடனும் சிநேகபூர்வமாகவும் நடைபெற்றதாக முகர்ஜி கூறினார். இலங்கையின் வடமாகாண மீள் கட்டுமாணப் பணிகளில் பங்கேற்பதற்கும் அனைத்து சமூகங்களினதும் அபிலாi~களை உள்ளடக்கிய வகையிலான ஒரு நிரந்தர சமாதானத்திற்கான அரசியல் தீர்வு மற்றும் பொருளாதார அடித்தளங்களை இடவும் இந்தியா தயாராக இருப்பதாக இச்சந்திப்பின்போது முகர்ஜி தெரிவித்தார்.
புலிகளுடன் யுத்த நிறுத்தமொன்று செய்து கொள்ளப்பட வேண்டுமென பல்வேறு தரப்புகளில் இருந்து எழும் கருத்துகள் குறித்து கேட்கப்பட்ட கேள்வியொன்றுக்குப் பதிலளிக்கையில், பயங்கரவாதம் ஒழித்துக்கட்டப்பட வேண்டும். இந்தியாவின் கரிசனை அப்பாவிப் பொதுமக்கள் மீது மட்டுமே என்று கூறிய முகர்ஜி, தமிழ் மக்களின் நலன்களைக் கவனிக்கும் பொறுப்பை ஜனாதிபதியிடமே கையளிப்பதாகக் கூறினார்.
புலிகளுக்கெதிரான அண்மைக்கால இராணுவ வெற்றிகள் இலங்கையின் வடக்கே இயல்பு வாழ்க்கையை மீளக்கட்டியெழுப்புவதற்கான ஒரு அரசியல் வாய்ப்பை ஏற்படுத்தியிருப்பதாக ஜனாதிபதி மகிந்த ராஜபக்~ இந்திய வெளிவிவகார அமைச்சர் பிரணாப் முகர்ஜியிடம் தெரிவித்தார். கலந்துரையாடலின் போது தமிழக முதல்வர் கருணாநிதி, அ.அ.தி.மு.கழகப் பொதுச் செயலாளர் ஜெயலலிதா மற்றும் அவர்களின் கட்சி உறுப்பினர்களை இலங்கை வந்து இன்றைய நிலவரங்களை நேரில் கண்டறியுமாறு பிரத்தியேக அழைப்பு ஒன்றை விடுத்த ஜனாதிபதி, ஆயுதங்களைக் கைவிட்டு எம்மோடு ஜனநாயக நீரோட்டத்தில் இணைந்து கொள்ளுமாறு விடுதலைப் புலிகளை வலியுறுத்துமாறும் கேட்டுக் கொண்டார்
0 விமர்சனங்கள்:
Post a Comment