பிரபாகரன் பதுங்கு குழியில்
விடுதலைப் புலிகளின் தலைவர் வே.பிரபாகரன் எதிர்வரும் சில வாரங்களில் கைதுசெய்யப்பட்டு விடுவார் என பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோதபாய ராஜபக்ஷ தெரிவித்தார்.
பிரபாகரன் முல்லைத்தீவுக் காட்டுக்குள் பதுங்குகுழிகள் மாறி மாறி ஒழிந்திருப்பதாக இந்தியாவின் டைம்ஸ்நௌவ் தொலைக்காட்சிக்கு வழங்கிய செவ்வியில் அவர் கூறினார்.
எதிர்வரும் வாரங்களில் பிரபாகரனின் எதிர்காலம் என் என்பதை உலகம் அறிந்துகொள்ளும் என கோதபாய தனது செவ்வியில் குறிப்பிட்டார்.
“முன்னரங்கப் பகுதிகளிலிருந்து அவர் கட்டளைகளை வழங்கவில்லை. பதுங்கு குழிகளுக்குள்ளேயே அவர் இருக்கிறார். அவர் இறந்துவிட்டாரா அல்லது வேறு நாட்டுக்குத் தப்பியோடிவிட்டாரா என்பது எதிர்வரும் 2-3 வாரங்களில் தெரியவரும். குழிக்குள் இருந்துகொண்டு அவரால் என்ன செய்யமுடியும்?” என பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கூறினார்.
விடுதலைப் புலிகளின் தலைவர் வே.பிரபாகரன் நாட்டைவிட்டுத் தப்பியோடவில்லையென, புலிகளின் அரசியல்துறைப் பொறுப்பாளர் பா.நடேசன் தகவல் வெளியிட்டு சில மணி நேரங்களின் பின்னரே கோதபாய ராஜபக்ஷ இவ்வாறு தெரிவித்துள்ளார்.
0 விமர்சனங்கள்:
Post a Comment