இலங்கைத் தமிழர் நிலைமை குறித்து மனதளவில் வேதனைப்படமட்டுமே முடியும்
இலங்கைத் தமிழர் பிரச்சினையில் இந்தியாவின் கொள்கையே மொரீஸியஸின் நிலைப்பாடும் என்று அந்த நாட்டின் துணை ஜனாதிபதி ஏ.வி.செட்டியார் கூறியுள்ளார்.
தமிழ்நாட்டில் அருப்புக் கோட்டையிலுள்ள தனது சகோதரியின் இல்லத்துக்கு வருகை தந்த மொரீஸியஸ் துணை ஜனாதிபதி செட்டியார் நிருபர்களிடம் கூறுகையில்;
இலங்கைத் தமிழரின் நிலை குறித்து மனதளவில் வேதனைப்படுவது மட்டும்தான் எங்களால் தற்போது செய்யமுடியும். அவர்களின் பிரச்சினையில் இந்தியாவின் கொள்கையே எங்களுடையதாக இருக்கிறது.மொரீஸியஸில் எதிர்க்கட்சியினர் ஆர்ப்பாட்டம், போராட்டம் நடத்துகின்றனர் என்றார்.
ஜீனில் மொரீஸியஸில் உலகத் தமிழர் மாநாடு இடம்பெறவுள்ளது. அந்த மாநாட்டுக்குத் தலைமைதாங்க அமைச்சர் ஸ்டாலினை அழைக்க வந்துள்ளேன். முதலமைச்சர் கருணாநிதியையும் சந்தித்து அழைப்பு விடுப்பேன். சர்வதேச நாடுகளிலுமிருந்து தமிழர்கள் மாநாட்டில் பங்கேற்பர் என்றும் செட்டியார் கூறியுள்ளார்.
0 விமர்சனங்கள்:
Post a Comment