வன்னிக்கு சர்வதேச கண்காணிப்பாளரை சிவ் சங்கர் மேனன் வரவழைக்க வேண்டும்
விடுதலைப் புலிகளுடன் தற்போது இடம்பெறும் மோதல்களின்போது பொதுமக்களின் பாதுகாப்பு தொடர்பாகவும் ஊடகத்துறை மீதான அண்மைய தாக்குதல்கள் குறித்தும் சிவ்சங்கர் மேனன் கொழும்புக்கு அழுத்தம் கொடுக்கவேண்டுமென சர்வதேச மன்னிப்புச்சபை கூறியுள்ளது.
மேலும், வன்னிப் பிராந்தியத்தின் மனிதாபிமான நிலைவரம் குறித்து மதிப்பிடுவதற்கு சர்வதேச கண்காணிப்பாளர்களை சிவ்சங்கர் மேனன் அழைக்க வேண்டும் என்றும் மன்னிப்பு சபை கேட்டுக்கொண்டுள்ளது.
?இலங்கைக்கான தங்களின் விஜயத்தின்போது வன்னியில் அகப்பட்டிருக்கும் பொதுமக்களின் பாதுகாப்பு குறித்த கவலைகள் தொடர்பாக இலங்கை அதிகாரிகளின் கவனத்திற்கு கொண்டுவரவேண்டுமன சர்வதேச மன்னிப்புசபை உங்களை கேட்டுக்கொள்கிறது? என்று லண்டனை தளமாகக் கொண்டியங்கும் சர்வதேச மன்னிப்புசபை தனது பகிரங்க கடிதத்தில் கோரியுள்ளது.
?முன்னணி அரங்குகளுக்கு அப்பால் அரச கட்டுப்பாட்டுப் பகுதிகளிலும் மனித உரிமை நிலைவரம் மோசமாக இருப்பதாக மன்னிப்புசபை கூறியுள்ளது.
இருதரப்பினருக்கும் இடையிலான மோதல்கள் அதிகரித்துள்ள நிலையில் 2 1/2 இலட்சத்துக்கும் அதிகமான தமிழ் மக்கள் கடுமையான நெருக்கடியை எதிர்கொண்டிருப்பதுடன் பாதுகாப்பான இடத்திற்கு செல்வதற்கான நெருக்கடியையும் எதிர்கொண்டிருக்கின்றனர்? என்றும் சர்வதேச மன்னிப்புசபை சுட்டிக்காட்டியுள்ளது.
0 விமர்சனங்கள்:
Post a Comment