இரணைமடுவில் கண்டுபிடிக்கப்பட்ட விமானத்தின் பாகங்கள் விமானப் படைக்குச் சொந்தமான விமானத்தின் சிதைவுகள்
பல வருடங்களுக்கு முன்னர் விபத்துக்குள்ளாகி விழுந்து நொறுங்கிய சிறீலங்கா விமானப்படை விமானத்தின் பாகங்கள் இரணமடுக்குளம் பகுதியில் வைத்துக் கண்டெடுக்கப்பட்டுள்ளது.
இரணைமடுக்குளம் அணைக்கட்டுப் பகுதியை இராணுவத்தினர் கடந்த சனிக்கிழமையன்று (17) தமது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தபோது அதன் கிழக்குப் பக்கமாக அமைந்திருந்த தமிழீழ விடுதலைப் புலிகளின் ஆறாவது விமான ஓடு பாதையையும் அத்துடன் புலிகளின் விமானம் ஒன்று சிதைவடந்த நிலையில் கைப்பற்றியதாகவும் தெரிவித்தனர்.
இந்த விமான ஓடுபாதைக்கருகில் கண்டெடுக்கப்பட்ட விமானத்தின் சிதைவுகள் இலங்கை விமானப் படைக்குச் சொந்தமான விமானமொன்றுக்குரியன என்பது தற்போது உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாகப் பாதுகாப்புக்கான ஊடக மத்திய நிலையம் இன்று (19) தெரிவித்தது.
பல வருடங்களுக்கு முன்னர் இந்த விமானம் விபத்துக்குள்ளாகி இந்தப் பிரதேசத்தில் விழுந்ததாகவும் பாதுகாப்புக்கான ஊடக மத்திய நிலையம் மேலும் தெரிவித்துள்ளது.
0 விமர்சனங்கள்:
Post a Comment