எமது விடுதலைப் போராட்டம் சரியான மூலோபாய நெறிக்கமைய மக்கள் சக்தியோடு வெற்றியை பெற்றே தீரும் - இளம்பருதி அறைகூவல்
இடப்பெயர்வுகளுக்கு மத்தியில் மக்கள் தமது வாழ்வியலை மாற்றியமைத்து தமிழ் தேச விடுதலைக்கு மூச்சுக்கொடுத்து நிற்பது வரலாற்றுப் பெறுமானம் மிக்கது என தமிழீழ விடுதலைப் புலிகளின் புதுக்குடியிருப்பு கோட்ட அரசியல்துறைப் பொறுப்பாளர் சி.இளம்பருதி தெரிவித்துள்ளார்.
முல்லைத்தீவு மாவட்டம் புதுக்குடியிருப்பில் முள்ளியவளை கோட்ட தேசிய போர் எழுச்சிக்குழு பிரதிநிதிகளுடனான கலந்துரையாடல் நடைபெற்றது.
முள்ளியவளை கோட்ட தேசிய போர் எழுச்சிக்குழு பொறுப்பாளர் இளம்புலி தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் புதுக்குடியிருப்பு கோட்ட அரசியல்துறைப் பொறுப்பாளர் சி.இளம்பருதி சிறப்புரையாற்றினார்.
இந்நிகழ்வில் உரையாற்றிய இளம்பருதி மேலும் தெரிவித்துள்ளதாவது:
மக்கள் சக்தியே மகத்தான சக்தி என்பதை எமது மக்கள் மெய்ப்பித்திருக்கின்ற செயல் மெய்சிலிர்க்க வைக்கின்றது.
தொடர்ச்சியாக இரண்டு ஆண்டு காலமாக இடைவிடாது தொடரும் சிங்கள பேரினவாத படைகளின் தொடர் போருக்குள் எமது மக்கள் முகம் கொடுத்து தாக்குப்பிடித்து தக்க வைத்துள்ளமை "தக்கதாகும்" என்ற தத்துவத்திற்கு அமைய எமது விடுதலைப் போராட்டம் சரியான மூலோபாய நெறிக்கமைய மக்கள் சக்தியோடு வெற்றியை பெற்றே தீரும் என்றார் அவர்.
infotamil






0 விமர்சனங்கள்:
Post a Comment