இலங்கை - இந்திய ஒப்பந்தம் ஒருபோதும் ஈழத் தமிழர் பிரச்சினைக்குத் தீர்வாகாது! - கலைஞர் கருணாநிதி விளக்கம்
"இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி ஜே.ஆர். ஜெயவர்த்தனாவும், இந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தியும் செய்து கொண்ட ஒப்பந்தத்தை இலங்கைத் தமிழர்கள் மீது திணிப்பது ஒரு தீர்வாகாது"
- இவ்வாறு தமிழக முதல்வர் மு.கருணாநிதி கூறியுள்ளார்.
அவ்வாறு திணிக்காமல் இருப்பதே அமைதி நிலை இலங்கையில் மறுபிறவி எடுப்பதற்கு ஏற்றது என்றும் அவர் குறிப்பிட்டார்.
இலங்கை இனப்பிரச்சினைக்கு இந்திய - இலங்கை அமைதி ஒப்பந்தமே திறவுகோல் என்று அண்மையில் இலங்கை வெளியுறவுத்துறை அமைச்சர் ரோஹித போகொல்லாகம தெரிவித்திருந்தார்.
இந்த விடயம் குறித்து தனது கட்சியினருக்கு எழுதிய பகிரங்க மடல் ஒன்றிலேயே கருணாநிதி இப்படித் தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் குறிப்பிட்டுள்ளவை வருமாறு:-
‘சிங்கள இராணுவத்துக்கும், விடுதலைப் புலிகளுக்கும் போர்’ என்ற போர்வையில் அப்பாவித் தமிழ் மக்கள் கொலை செய்யப்படுகின்றனர்.
இந்திய வெளியுறவுச் செயலர் கொழும்பு சென்று இந்தியா திரும்பியும் இலங்கையில் போர் நிறுத்தம் குறித்து அறிவிக்கப்படவில்லை. இதுதவிர இந்திய வெளியுறவுத்துறைத் அமைச்சர் பிரணாப் முகர்ஜி இலங்கை சென்று வருவதற்கு இயலாத காரணம் எதுவும் இருந்தாலும், அதனையும் வெளிப்படையாகத் தெரிவித்திருக்கலாம்.
ஜெயவர்த்தனா - ராஜீவ் காந்தி உடன்பாடு பற்றி பேசி முடிக்கிற வரை போர் நிறுத்த முயற்சியை மேற்கொள்வது பெரிய தவறு ஒன்றும் இல்லை.
அதேநேரம் இலங்கைத் தமிழர் பிரச்சினை தேர்தல் அரசியலாக சில அரசியல் கட்சிகள் மாற்றிக் கொண்டிருக்கின்றன - என்றார்.
0 விமர்சனங்கள்:
Post a Comment