கட்டுப்பாட்டுப் பகுதிக்கு வந்தவர் கண்ணிவெடியில் காலை இழந்தார்
வடமராட்சி கிழக்கு இராணுவக் கட்டுப்பாடற்ற பகுதியிலிருந்து, அரசாங்க கட்டுப்பாட்டுப் பகுதிக்கு வரும் வழியில் கண்ணிவெடியில் அகப்பட்ட ஒருவர் காலொன்றை இழந்துள்ளார்.
இந்தச் சம்பவம் நேற்றுமுன்தினம் முதன்கிழமை நடைபெற்றுள்ளது. வுடமராட்ச்சி கிழக்கிலிருந்து சுண்டிக்குளம் பகுதியை நோக்கி வந்துகொண்டிருந்த ஒருவரே இவ்வாறு கண்ணிவெடியில் சிக்குண்டுள்ளார்.
கிட்ணப்பிள்ளை சுரேஷ்குமார் (48) என்பவரே இவ்வாறு காயமடைந்துள்ளார். வலதுகாலின் பாதப்பகுதியை இழந்துள்ள இவர், சாவகச்சேரி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு பின்னர், யாழ் போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளனர்.
குடும்ப உறுப்பினர்களுடன் கட்டுப்பாட்டுப் பகுதிக்கு வந்துகொண்டிருந்தபோதே இந்தச் சம்பவம் நடந்துள்ளது.
0 விமர்சனங்கள்:
Post a Comment