சயனைட் அருந்திய நிலையில் மட்டக்களப்பு வைத்தியசாலையில் இளைஞரொருவர் அனுமதி
சயனைட் உட்கொண்ட நிலையில் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் இன்று நண்பகல் 25 வயது இளைஞரொருவர் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
ஆரையம்பதியைச் சேர்ந்த குலசேகரம் புவிராஜா என தேசிய அடையாள அட்டை மூலம் இனம் காணப்பட்டுள்ள இந்நபர் ஒந்தாச்சிமடத்தில் விசேட அதிரடிப் படையினரால் கைதானதாகத் தெரிவிக்கப்படுகிறது.
சயனைட் உட்கொண்ட இந்நபர் இன்று காலை உடனடியாகக் களுவாஞ்சிக்குடி வைத்தியசாலைக்குக் கொண்டு செல்லப்பட்டு மேலதிக சிகிச்சைக்காக மட்டக்களப்பு வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.
0 விமர்சனங்கள்:
Post a Comment