புலிகளின் சிறைக்கூடங்கள் உட்பட 5 ஏக்கர் நிலப்பரப்பிலான பாரிய முகாமொன்று கைப்புற்றப்பட்டுள்ளது. (படங்கள்)
இன்று காலை விசுவமடு மேற்குப் பிரதேசத்தில் புலிகளது பாரிய முகாம் ஒன்று படையினர் வசம் வீழ்ந்துள்ளது. 5 ஏக்கர் விஸ்தீரணம் கொண்ட இம்முகாமில் புலிகளது பாரிய பங்கர்கள், ஆடம்பரவீடுகள், களஞ்சியம், மற்றும் புலிகளின் சித்திரவதைக்கூடங்கள் மற்றும் சிறைக்கூடுகள் என்பன காணப்படுவதாக பாதுகாப்புத்தரப்பினர் தெரிவித்துள்ளனர்.
10 அடி உயரத்திற்கு முள்கம்பிச் சுருள்களால் காவலிடப்பட்ட இம்முகாமில் காணப்பட்ட சிறைக்கூடங்கள் முற்றிலும் சீமெந்து கொங்கிறீர்ரால் கட்டப்பட்டிருந்ததுடன் காற்றுப்போக்குவரத்துக்காக சிறியதோர் துவாரம் மட்டுமே அமைக்கப்பட்டுள்ளது. எவ்வித வெளிச்சமும் இல்லாத அச்சிறைக்கூடுகளுள் திறந்த மலசலகூடம் காண்படுவதுடன் மலசலகூடத்தை அண்டியே சிறைக்கைதிகள் தூங்கவும் சாப்பிடவும் வேண்டியுள்ளது. அச்சிறைக் கூண்டினுள் சங்கிலிகளுடன் இணைக்கப்பட்ட மாஞ்சிக்கூட்டங்கள் சுவருடன் பொருத்தப்பட்டுள்ளது. மிகவும் ஒடுங்கிய பாரிய இரும்பு கேடர்களினால் ஆக்கப்பட்டுள்ள கதவுகளைக் கொண்ட இக்கூடங்கள் வெளிப்பக்கமாக மாத்திரமே பூட்டமுடியும் எனவும் அங்கு சென்றிருந்த ஊடகவியலாளர்கள் தெரிவிக்கின்றனர்.
இச்சிறைகள் பெரும்பாலும் புலிகளின் அராஜகங்களை எதிர்த்த பொதுமக்களையும் புலிகளுக்கு கட்டுப்பட மறுத்த அல்லது அவ்வியக்கத்தை விட்டு ஓட எத்தனித்த அவர்களது உறுப்பினர்ளையும் அடைத்து வைத்து சித்திரவதை செய்ய பயன்படுத்தப்பட்டிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகின்றது.
0 விமர்சனங்கள்:
Post a Comment