புலிகளின் தலைவர்கள் தப்பிக்கமுயல்வதாக தகவல்
இலங்கையிலிருந்து விடுதலை புலிகள் இயக்க தலைவர் பிரபாகரன் மற்றும் பொட்டு அம்மான் உள்ளிட்டோர் தப்பி தமிழகத்திற்கு வந்து வெளிநாடு செல்லலாம் என இரகசிய தகவல் வந்துள்ளதாக தெரிவிக்கப்படுவதை தொடர்ந்து கடலோர மாவட்டங்களில் கியூ பிரிவு டி.எஸ்.பி., தலைமையில் பொலிஸார் தீவிர ரோந்தில் உள்ளனர்.
இலங்கையில் புலிகளுக்கும் அரசு படைகளுக்கும் இடையே போர் உக்கிரமடைந்துள்ள நிலையில் புலிகளின் மேற்படித் தலைவர்கள் உட்பட சிலர் நீர்மூழ்கி படகில் தமிழகம் வழியாக வெளிநாட்டிற்கு தப்பி செல்ல திட்டமிட்டுள்ளதாகவும், புலிகளின் போரை அங்குள்ள சொர்ணம் என்பவர் தலைமை ஏற்று நடத்த உள்ளதாகவும் இரகசிய தகவல் வந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது அதைத் தொடர்ந்து தமிழக கடலோர பகுதிகளில் கியூ பிரிவு டி.எஸ்.பி.,க்கள் பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த கியூ பிரிவு பொலிஸாருடன் இரவு பகலாக ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர்.
0 விமர்சனங்கள்:
Post a Comment