தமிழ்தேசிய கூட்டமைப்பினர் பற்றி ஒரு குறிப்பு
வன்னி மக்களின் நலனுக்காக கூட்டமைப்பு பேச வேண்டும்
தமிழ்த் தேசியக் கூட்டமைப்புப் பாராளுமன்ற உறுப்பினர்கள் பற்றி அண்மையில் பல்வேறு செய்திகள் வெளியாகின்றன. சிலர் வெளிநாடு களில் நிரந்தரமாகக் குடியேறப் போவதாக வும் வேறு சிலர் புலிகளுடனான தொடர் பைத் துண்டித்துக் கொண்டு மிதவாத அரசி யல் நடவடிக்கையில் ஈடுபடப் போவதாக வும் செய்திகள் வெளியாகியுள்ளன.
இச் செய் திகள் முற்றுமுழுதாக உண்மையானவையா என்பதையிட்டு உறுதிப்படுத்த முடியாத போதிலும், கூட்டமைப்புப் பாராளுமன்ற உறு ப்பினர்கள் சிலர் ஏற்கனவே வெளிநாடுக ளுக்குச் சென்றிருப்பதனாலும் தங்களைச் சம்பந்தப்படுத்தி வெளியாகிய செய்திகளைப் பெயர் குறிப்பிட்ட பாராளுமன்ற உறுப்பின ர்கள் மறுப்பதற்கு முன்வராததாலும் அச் செய் திகளின் நம்பகத்தன்மையை ஏற்றுக்கொள்ள வேண்டியுள்ளது.
இன்று நெருக்கடி நிலையொன்று உருவாகி யிருப்பதை யாரும் மறுக்க முடியாது. வன் னியில் வாழும் மக்கள் இந்த நெருக்கடிக்கு முகங்கொடுக்கின்றனர்.
அங்கு இடம்பெறும் இராணுவ நடவடிக்கையினால் இம் மக்கள் பாதிப்புகளுக்கு உள்ளாகின்றனர். மரணங்கள் சம்பவிக்கின்றன. பலர் காயங்களுக்கு உள் ளாகின்றனர். இந்த நெருக்கடியை ஏற்படுத் தியதில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கும் பங்கு உண்டு.
இனப்பிரச்சினைக்கு அரசியல் தீர்வு காணும் முயற்சி பலவீனமடைந்தமை வன்னி மக்கள் இன்று முகங்கொடுக்கும் நெருக்கடிக்கு வித் திட்டது எனக் கூறுவது மிகையாகாது. அர சியல் தீர்வு முயற்சி பலவீனமடைந்ததற்குத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தூரநோக்க ற்ற செயற்பாடுகள் பிரதான காரணம் என்ப தைப் பல தடவைகள் விளக்கமாகக் கூறியி ருக்கின்றோம்.
மீண்டும் அவற்றைக் கூற வேண்டியதில்லை. புலிகளின் நிகழ்ச்சி நிரலு க்கு அமைவாக ஆரம்பிக்கப்பட்ட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பேச்சளவில் என்ன தான் சொன்னாலும் அரசியல் தீர்வை நிரா கரித்துத் தனிநாட்டு இலக்குடனேயே செயற் பட்டது.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளு மன்ற உறுப்பினர்கள் சுதந்திரமான வாக்களி ப்பின் மூலம் தெரிவு செய்யப்பட்டவர்களா அல்லது முறைகேடான வாக்களிக்களிப்பின் மூலம் தெரிவு செய்யப்பட்டவர்களா என்ற விவாதம் ஒருபுறமிருக்க, பாராளுமன்றத்தில் கூடுதலான உறுப்பினர்களைக் கொண்ட கட்சி என்ற வகையில் இக்கட்சி அரசியல் தீர்வை நிராகரிப்பது அதற்கான முயற்சியைப் பல வீனப்படுத்தவே செய்யும்.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அரசியல் தீர்வுக்காக அக்கறை யுடள் செயற்பட்டிருந்தால் வன்னி மக்கள் முகங்கொடுக்கும் இன்றைய நெருக்கடி யைத் தவிர்த்திருக்க முடியும். ஆயுதப் போரா ட்டத்தின் மூலம் தனிநாடு அமைப்பது சாத் தியமில்லை என்பதை விளங்கிக் கொள்ளா மல் கூட்டமைப்புக் கட்சிகள் செயற்பட் டமை இன்று வன்னி மக்களை அவல நிலைக்குத் தள்ளியிருக்கின்றது.
நெருக்கடி தோன்றுவதற்குக் காரணமானவ ர்கள் நெருக்கடிலிருந்து விலகிச் செல்வது தலைமைத்துவப் பண்பாகாது. வன்னி மக் களை அவலத்திலிருந்து விடுவிப்பதற்கான வழிவகைகளை மேற்கொள்ளாமல் வெளிநாடு களுக்குச் செல்வதும் இலங்கையிலேயே ஒது ங்கி வாழ்வதும் அம்மக்களை நட்டாற்றில் கைவிடுவதற்குச் சமன்.
வன்னியில் மோதல் நடைபெறும் பிரதேசங் களில் வாழும் மக்கள் அங்கிருந்து வெளியேறிப் பாதுகாப்பான இடங்களுக்குச் செல்வதுதான் பாதிப்புகளிலிருந்து விடுபடுவதற்கான ஒரே வழி. புலிகளுக்கு எதிரான இராணுவ நடவ டிக்கையை எக்காரணம் கொண்டும் நிறுத்தப் போவதில்லை என்று அரசாங்கம் அறிவித் திருக்கும் நிலையில் இதைத் தவிர வேறு வழி இல்லை.
பாதுகாப்பான பகுதிகளை நோக்கி நகருமாறு கூட்டமைப்பினர் வன்னி மக்களுக்கு வேண்டுகோள் விடுக்கின்ற அதே வேளை அம்மக்கள் பாதுகாப்பான இடங்க ளுக்குச் செல்வதை ஊக்குவிக்குமாறு புலிகளு க்கும் வேண்டுகோள் விடுக்க வேண்டும். இதைச் செய்யத் தவறுவது வன்னி மக்க ளைக் கைவிடுவதாகிவிடும்.
தவறுகளைத் திருத்திக் கொள்வது அரசிய லில் உயர்வான பண்பு. இதுவரை சென்ற பாதை தவறானது என்பதைக் கூட்டமைப்பு உணர்ந்து சரியான பாதைக்குத் திரும்ப வேண் டும். நடைமுறைச் சாத்தியமான வழியில் பிர ச்சினைகளுக்குத் தீர்வு காண்பதே சரியான அரசியல்.
0 விமர்சனங்கள்:
Post a Comment