த. தே. கூட்டமைப்பு தமிழ் மக்களுக்காக செயற்படுமே அன்றி புலிகளுக்காக அல்ல : இரா.சம்பந்தன்
விடுதலைப்புலிகள் போர் நிறுத்தம் ஒன்றை ஏற்படுத்த பகிரங்கமாக விருப்பம் தெரிவித்துள்ள நிலையில் முல்லைத்தீவில் சிக்கியுள்ள மூன்றை லட்சம் மக்களை காப்பற்றுவதற்காக அரசாங்கமும் போர் நிறுத்தம் ஒன்றை அறிவிக்க வேண்டும் என தமிழ்தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்ற கட்டிடத் தொகுதியில் இன்று (பெப். 17) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இதனை கூறியுள்ளார். மோதல்கள் தீவிரமடைந்துள்ளது. கடந்த டிசம்பர் மாதம் முதல் இதுவரை வன்னியில் இரண்டாயிரம் மக்கள் கொல்லப்பட்டுள்ளனர். 4 ஆயிரத்து 500 பொதுமக்கள் காயமடைந்துள்ளனர்.
முல்லைத்தீவில் குடிநீர், உணவு மற்றும் மருந்து பொருட்கள் இல்லை எனவும் குறிப்பிட்டுள்ளார். தமிழ் தேசியக் கூட்டமைப்பு தமிழ் மக்களுக்கு சார்பாவே செயற்படுவதாகவும் விடுதலைப் புலிகளுக்காக அல்ல எனவும் இரா.சம்பந்தன் கூறியுள்ளார்.






0 விமர்சனங்கள்:
Post a Comment