சவூதி அரேபிய வரலாற்றில் முதல் முறையாக ஒரு பெண் அமைச்சர் நியமனம்
சவூதி அரேபிய அமைச்சரவையில் பெண் கல்வித்துறை துணை அமைச்சராக பிரபல கல்வியாளர் நோரா அல் பயஸ் நியமிக்கப்பட்டுள்ளார். சவூதியின் முதல் பெண் அமைச்சர் இவர் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் சவூதி வரலாற்றில் மிக உயரிய அரசுப் பதவிக்கு பெண் ஒருவர் நியமிக்கப்படுவதும் இதுவே முதல் தடவையாகும்.இதுகுறித்து நோரா அல் பயஸ் கூறுகையில்,
"இது மிகவும் கடினமான பணி. எனக்குத் துணைக் கல்வி அமைச்சர் பதவி கிடைத்திருப்பது மகிழ்ச்சி தருகிறது. நான் ஒரு முன் மாதிரியாக திகழ்வேன் என நம்புகிறேன். எதிர்வரும் ஆண்டுகளில் பெண்கள் உயர் பதவிக்கு வர முடியும் என்ற நம்பிக்கை இதன் மூலம் ஏற்பட்டுள்ளது. கல்வித்துறை அமைச்சராக சிறப்பாக செயல்படுவேன் என்ற நம்பிக்கை எனக்கு உள்ளது" என்றார்.
தற்போது நோரா அல் பயஸ், சவூதி பொது நிர்வாகக் கழகத்தில் உயர் பதவியில் உள்ளார்.இவர் தவிர மேலும் சில புதிய அமைச்சர்களையும் மன்னர் அப்துல்லா நியமித்துள்ளார். அதேபோன்று மத்திய வங்கியின் புதிய ஆளுநராக முகம்மது அல் ஜஸ்ஸர் நியமிக்கப்பட்டுள்ளார்.
கடந்த 2005ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் அப்துல்லா மன்னரானார். அதன் பின்னர் அமைச்சரவையில் பெரிய அளவில் மாற்றம் செய்யப்படுவதும் இதுவே முதல் முறையாகும்.
0 விமர்சனங்கள்:
Post a Comment