தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் தமது அமைப்பிலுள்ள ஆயுதப் பிரிவை கலைக்கிறது : கிழக்கு மாகாண முதலமைச்சர் சிவனேசதுரை சந்திரகாந்தன்
தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் தமது அமைப்பிலுள்ள ஆயுதப் பிரிவை கலைப்பதற்கு தயாராகி வருவதாக கிழக்கு மாகாண முதலமைச்சர் சிவனேசதுரை சந்திரகாந்தன் தெரிவிக்கின்றார்.
இது தொடர்பாக பாதுகாப்பு தரப்பு உட்பட ஏனைய அதிகாரிகளுடன் எற்கனவே பேச்சுவார்ததைகள் ஆரம்பிக்கப்பட்டு நடைபெற்று வருகின்றது. இருப்பினும் கால எல்லை பற்றி எதிர் வரும் புதன்கிழமை பாதுகாப்பு அதிகாரிகளுடன் பேசி முடிவு எடுக்கபப்டும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.இது குறித்து மேலும் தெரிவிக்கையில்,
எமது கட்சி ஆரம்பிக்கப்பட்ட காலத்தில் புலிகளின் அச்சுறுத்தல்கள் குறைவடையும் போது ஆயுதங்களைக் ஒப்படைப்போம் என்று கூறியிருந்தோம். பெரிய அளவில் ஆயுதங்கள் எம்மிடம் இல்லை. இருப்பினும் எம்மிடமிருக்கும் அனைத்து ஆயுதங்களையும் ஒப்படைப்போம் .ஆயுதங்கள் ஒப்படைக்கப்பட்ட பின்பு எமது உறுப்பினகளுக்கு பல்வேறு தொழில் துறைகளில் பயிற்சி மற்றும் வேலை வாயப்பு தொடர்பாக அரசாங்கத்துடன் பேச்சுவார்ததைகளை நடத்தியிருக்கின்றோம்.
தற்போது பாதுகாப்பு அச்சுறுத்தல்கள் குறைந்துள்ளமையே இந்த முடிவு எடுப்பதற்கு பிரதான காரணமாகும் .அதனை விட ஆயுதங்களை தொடர்ந்து வைத்திருப்பதால் வேறு பிரச்சினைகள் எழுகின்றது. மக்கள் எம் மீது நம்பிக்கை இழக்கின்றார்கள். இதன் காரணமாக முழுமையாக ஜனநாயகத்தில் ஈடுபட்டுள்ளதை உறுதிபப்டுத்த வேண்டிய தேவை இருப்பதால் விரைவாக ஆயுதங்களை ஒப்படைக்க வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது. அப்போது தான் மக்கள் எம் மீது நம்பிக்கை வைப்பார்கள். ஆயுதங்களை ஒப்படைக்கும் போது நூறு வீதம் ஜனநாயக கட்சியாக நாம் மாற முடியும் இருந்தும் ஜனநாயகத்திற்கு வந்த கட்சி என்ற அடிப்படையில் மக்கள் எம் மீது கொண்டுள்ள நம்பிக்கையை மேலும் அதிகரிக்க வேண்டிய தேவை உளளது அதற்கமைய வேலைத்திட்டங்களை முன்னெடுக்க வேண்டியுள்ளது.
அது மட்டுமல்ல எமது உறுப்பினர்களும் தமது வாழ்வாதாரத்துக்கான பொருளாதாரத்தை கட்டியெழுப்பி இயல்பு வாழ்க்கைக்கு திரும்ப வேண்டியுள்ளது. இந்த முடிவானது அழுத்தங்கள் காரணமாக எடுக்கப்பட்ட முடிவு அல்ல எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
0 விமர்சனங்கள்:
Post a Comment