வன்னி மக்கள் பாதுகாப்பை உறுதிப்படுத்துமாறு அமெரிக்க செனட் சபை உறுப்பினர்கள் கோரிக்கை
வன்னியில் சிக்கியுள்ள அப்பாவி பொதுமக்களின் பாதுகாப்பில் இலங்கை அரசாங்கமும் தமிழீழ விடுதலைப் புலிகளும் கூடிய கவனம் செலுத்த வேண்டுமென அமெரிக்க செனட் சபையைச் சேர்ந்த இரு உறுப்பினர்கள் வேண்கோள் விடுத்துள்ளனர்.
வெளிவிவகார உறவுகள் தொடர்பான செனட்சபை கமிட்டித் தலைவரான ஜோன்கெரி மற்றும் றிச்சர்ட் லுகர் ஆகியோரே இந்த வேண்டுகோளை விடுத்துள்ளனர். அவர்கள் தமது வேண்டுகோளில்,'வன்னி; யுத்தப் பகுதியில் சிக்கியுள்ள அப்பாவி மக்கள் பாதுகாப்புத் தொடர்பில் இலங்கை அரசாங்கமும் தமிழீழ விடுதலைப் புலிகளும் உடனடி நடவடிக்கையை மேற்கொண்டு அவர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த வேண்டும்.
நிவாரணம் வழங்கும் நிறுவனங்கள், வெளிநாட்டுத் தூதுவர்கள், வெளிநாட்டு செய்தியாளர்கள் தொடர்பில் இலங்கை அரசாங்கம் அண்மையில் விடுத்திருந்த அறிக்கையானது கவலை தருவதாக உள்ளது" என்று தெரிவித்துள்ளனர்.
அண்மைக்காலமாக இலங்கையில் ஊடகவியலாளர்கள், ஊடக நிறுவனங்கள் மீது மேற்கொள்ளப்பட்டு வரும் தாக்குதல்கள் குறித்தும் தமது கவலையை அவர்கள் வெளியிட்டுள்ளனர்.
0 விமர்சனங்கள்:
Post a Comment