சூப்பர்மானும் அம்புலிமாமா தமிழர்களும்
“எப்பொருள் யார்யார்வாய்க் கேட்பினும் அப்பொருள்
மெய்ப்பொருள் காண்பதறிவு”
ஆனால் இப்போது எல்லாவற்றையும் மறந்து யார் என்ன சொன்னாலும் நம்பிவிடுகின்ற நிலையில் வாழ்ந்து கொண்டிருக்கின்றோம் என்றால் யார் குற்றம்?.
கல்கியில் “பவழத்தீவை”யும், அம்புலிமாமாவில் கற்பனைக்கதைகளையும் படித்து வளர்ந்தவர்கள் நாங்கள். இடையில் கல்கண்டுவில் வந்த தமிழ்வாணனின் துப்பறியும்கதைகள் வேறு. கல்கியின் “சிவகாமியின் சபதத்தில்” வந்த சிவகாமி கற்பனைப்பாத்திரம் என்பதை நன்றாகத் தெரிந்தும் சிவகாமிக்காக கண்ணீர் விட்டவர்கள்.
இவற்றை எதற்காகக் கூறுகின்றேன் என்றால் நமது எதிர்பார்ப்புடன் உள்ள எந்த செய்தியையும் கண்ணை மூடிக்கொண்டு நம்பிவிடுகின்றோம்.
பிரபாகரன் எதற்கும் துணிந்தவர்
இந்திய இராணுவத்தையே விரட்டியடித்தவர்
அவருக்கு எல்லாமே தெரியும்
1. முகுந்தன் என்ற உமாமகேஸ்வரனை கொலை செய்யும் நோக்கத்தில் முகுந்தன் உணவருந்தச் சென்ற உணவுவிடுதிக்கு வெளியே பிரபாகரன் காத்துக்கொண்டிருந்தார்.
முகுந்தன் வெளியே வந்த போது அவரை நோக்கிச் சுட்டார். அனால் குண்டு முகுந்தன் மீது படவேயில்லை.
2. நீர்வேலி வங்கிக் கொள்ளையின் போது வங்கிப்பணத்தை ஏற்றி வந்த வாகனத்தின் இருபுறமும் உள்ள பொலிஸ் உத்தியோகத்தர்களையும் கொலை செய்யும் பொறுப்பு பிரபாகரனிடமும் சிறீசபாரட்டினத்திடமும் கொடுக்கப்பட்டிருந்தது. சிறீ தனது பொறுப்பை சரியாக செய்து முடித்திருந்தார். பிரபாகரனும் சுட்டார் அது பண்டா என்ற பொலிஸ் மீது படவேயில்லை. ஆனால் பண்டா சூடுபட்டு இறந்தது போல் கீழே விழுந்துவிட்டார். பிரபாகரன் பண்டாவைக் கடந்து பணம் வந்த வானை நோக்கிச் செல்ல முற்பட்டபோது பண்டா எழுந்து பிரபாகரனைச் சுட முயற்சித்தார். அதனை அவதானித்த சிறீ “தம்பி தள்ளடா” என்று கூறி, பிரபாகரனைத் தள்ளி விட்டு பண்டாவை சுட்டுக் கொன்றார். (அதற்குப் பிரதியுபகாரமாகத்தான் சிறீயை பிரபாகரன் கொலை செய்தாரோ?)
பிரபாகரன் எதற்கும் துணிந்தவர்
ஒருதடவை சென்னையில் தமிழீழ விடுதலை இயக்கம், விடுதலைப் புலிகள், ஈழப்புரட்சி அமைப்பு, ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி என்பன கூட்டம் நடாத்திக் கொண்டிருந்தனர். மாடிவீடொன்றில் இருள் சூழ்ந்த பின்பு கூட்டம் நடந்துகொண்டிருந்தது. அங்கு பிரபாகரன், சிறீ சபாரட்டினம், பத்மநாபா, பாலகுமார், வரதராஜப்பெருமாள், கேதீஸ்வரன் மற்றும் சிலர் இருந்தனர். பிரபாகரன் வந்த இரண்டு கார்களில் பாதுகாப்பிற்காக வந்த பலர் ஆயுதங்களுடன் நின்று கொண்டிருந்தனர். அப்போது எதிர்பாராத விதமாக மின்சாரம் நின்று விட்டது. எல்லோரும் அவரவர் இருக்கையில் அமர்ந்திருந்தனர். அப்போது கேதீஸ்வரன் சிகரெட் பற்ற வைப்பதற்காக, மற்றவர்களிற்கு இடையுறாக இருக்கும் என்று நினைத்து, எழுந்து யன்னலோரமாக சென்றார். தீப்பெட்டியை எடுத்து தீமூட்டியபோது யன்னலுக்குப் பக்கத்திலுள்ள மூலையில் பிரபாகரன் துப்பாக்கியுடன் நின்றுகொண்டிருந்தார். வேறுவிதமாகக் கூறுவதானால் பிரபாகரன் பயத்தில் யாருக்கும் தெரியாமல் எழுந்து சென்று யன்னலோரம் உள்ள மூலையில் பதுங்கினார்.
இந்திய இராணுவத்தையே விரட்டியடித்தவர்
அப்படியானால் சிறிய இராணுவமான சிறீலங்காவிடம் தோற்பது எப்படி?
அவருக்கு எல்லாமே தெரியும்
இது மட்டும் உண்மை. இல்லாவிட்டால் ஏனைய புலிகளையும் முந்திக்கொண்டு குடும்பத்துடன் ஓட்டம் எடுத்திருப்பாரா?
-ஞானம்
0 விமர்சனங்கள்:
Post a Comment