வடபகுதி முழுமையாக கைப்பற்றப்பட்டபின் நாட்டு மக்கள் நிம்மதியாக வாழ்வார்கள்
2005 ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலின் போது ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி மக்களுக்குத் தெரிவித்த உறுதி மொழிகள் படிப்படியாக இன்று நிறைவேற்றப்பட்டு வருகின்றது.
இவ்வாறு தேசிய சுதந்திர முன்னணியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான விமல் வீரவன்ச சிலாபம் நகரில் நடைபெற்ற தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் பேசும்போது கூறினார்.
தொடர்ந்து பேசிய விமல் வீரவன்ச எம்.பி.;எமது பாதுகாப்பு படையினர் வடக்கில் தீரத்துடன் போராடி விடுதலைப்புலிகளை தோற்கடித்து வருகின்றனர். கிளிநொச்சி , ஆனையிறவு, முல்லைத்தீவு போன்ற விடுதலைப்புலிகளின் கட்டுப்பாட்டில் இருந்த பிரதேசங்களை கைப்பற்றி வருகின்றனர்.
கிழக்கு ஏற்கனவே கைப்பற்றப்பட்டுவிட்டது. வடபகுதி முழுமையாக கைப்பற்றப்பட்ட பின்னர் நாட்டு மக்கள் நிம்மதியுடன் வாழும்நிலை ஏற்படும்.
ஐக்கிய தேசியக் கட்சியினர் செய்த துரோகத்தனமான செயல்களால்தான் நாட்டில் அதிகளவுக்கு பிளவுகளும் நெருக்கடிகளும் பிரச்சினைகளும் ஏற்பட்டன. நாட்டின் இன்றைய நிலைமைகளுக்கு ஐக்கிய தேசியக் கட்சியினரே காரணம்.
ஜனாதிபதி மகிந்தராஜபக்ஷ இவற்றைப் போக்குவதற்கு அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டுவருகின்றார். ஜனாதிபதியின் செயற்பாடுகளை உலக நாடுகளே பாராட்டுகின்றன. நாட்டு மக்கள் நிம்மதியாகவும் ஒற்றுமையாகவும், சுபிட்சமாகவும் வாழுவதற்கும் காலம் நெருங்கியுள்ளது. எனவே எதிர்வரும் மாகாணசபைத் தேர்தலில் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியை வெற்றிப்பெறச் செய்ய வேண்டியது இந்த மாகாண மக்களின் கடமையாகும் என்றார்.
0 விமர்சனங்கள்:
Post a Comment