புதுக்குடியிருப்பு நகருக்குள் படையினர் பிரவேசம்
முல்லைத்தீவு மாவட்டத்தைக் கைப்பற்றுவதற்கான இராணுவ முன்னெடுப்புக்களில் ஈடுபட்டு வரும் படையினர் இன்று அதிகாலை புதுக்குடியிருப்பு நகருக்குள் பிரவேசித்துள்ளதாக தேசிய பாதுகாப்புக்கான ஊடக மத்திய நிலையம் தெரிவித்தது.
இந்நிலையில் முல்லைத்தீவில் ஏனைய சில பகுதிகளினூடாகவும் முன்னகர்வினை மேற்கொண்டு வரும் படையினருக்கும் விடுதலைப் புலிகளுக்கும் இடையில் கடும் மோதல்கள் இடம்பெற்று வருவதாகவும் ஊடக நிலையம் தெரிவித்தது.
இது தொடர்பில் பாதுகாப்புக்கான ஊடக நிலையம் மேலும் கூறியதாவது
விடுதலைப் புலிகளின் பிரதான நகராக விளங்கும் புதுக்குடியிருப்புக்குள் பிரவேசித்துள்ள படையினர் அப்பகுதியை முழுமையாக கைப்பற்றுவதற்கான இராணுவ முன்னெடுப்புக்களில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதேவேளை, முல்லைத்தீவு மாவட்டத்தின், குருவில்குளம், அடம்பன்குளம், குப்பாலான்குளம், புதுக்குடியிருப்பு தெற்கு, மற்றும் புதுக்குடியிருப்பு மேற்கு போன்ற பகுதிகளிலும் இரு தரப்புக்கும் இடையில் கடும் மோதல்கள் இடம்பெற்றுள்ளன.
இதன் போது விடுதலைப் புலிகளால் மேற்கொள்ளப்பட்ட மோட்டார் உறிகணை மற்றும் சிறு ஆயுதங்களிலான தாக்குதல்களில் படைத்தரப்புக்கு சிறியளவில் சேதங்கள் ஏற்பட்டுன்னன. ஆயினும் அத்தாக்குதல்கள் படையினரின் பதில் தாக்குதல்களின் போது முறியடிக்கப்பட்டுள்ளதுடன் அம்முறியடிப்புத் தாக்குதல்களில் புலிகள் தரப்புக்கு பெருமளவில் சேதங்கள் ஏற்பட்டுள்ளன.
மோதல்களை அடுத்து அப்பகுதிகளில் மேற்கொள்ளப்பட்ட சோதனை நடவடிக்கைகளின் போது புலி உறுப்பினர்களின் சடலங்கள் உட்பட ஆயுதங்கள் பலவும் மீட்கப்பட்டுள்ளன.
12 கிலோகிராம் நிறையுடைய கிளேமோர் குண்டுகள்
45 ,7.5 மற்றும் 2.5 கிலோகிராம் நிறையுடைய கிளேமோர் குண்டுகள்
23, நிலக்கண்ணிவெடிகள் 11, கைக்குண்டுகள்
15, 81 மில்லிமீற்றர் ரக மோட்டார் குண்டுகள்
25, மாருதி சுசுகி ரக வாகனம்
01, செட்டலைட் அன்ரனா
01, சொட்கன் 01, ரிப்பீட்டர் ரக துப்பாக்கி
01, மற்றும் சிறியரக ஆயுதங்கள்
03 போன்ற ஆயுதப் பொருட்களே படையினரால் இவ்வாறு மீட்கப்பட்டுள்ளன. இதனை அடுத்து அப்பகுதிகளில் படையினரால் தொடர்ந்தும் சோதனை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
0 விமர்சனங்கள்:
Post a Comment