கணேசபுரத்தில் படுகொலை செய்யப்பட்ட இளைஞர்கள் கண்ணிவெடி அகற்றும் பணியாளர்
வவுனியா,கணேசபுரம் பகுதியில் படுகொலை செய்யப்பட்ட இரு இளைஞர்களும் கண்ணிவெடி அகற்றும் பிரிவில் பணியாற்றியவர்களென அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
கணேசபுரம் அரசினர் பாடசாலைக்கு பின்புறமுள்ள பற்றைக் காட்டுக்குள் கடந்த செவ்வாய்க்கிழமை அரைவாசி கருகிய நிலையில் அடையாளம் காணமுடியாதவாறு இரு இளைஞர்களது சடலங்கள் கண்டுபிடிக்கப்பட்டன.
இவ்விரு சடலங்களும் இடுப்பு பகுதிகளுக்கு மேல் எரிந்து கருகியிருந்த போதிலும் வவுனியா ஆஸ்பத்திரி சவச்சாலைக்குச் சென்ற உறவினர்கள் இரு சடலங்களையும் அடையாளங் கண்டுள்ளனர்.
வவுனியாவில் கண்ணிவெடி அகற்றும் பிரிவில் பணிபுரிந்த ஓமந்தை நாம்பன்குளத்தைச் சேர்ந்த செல்வரட்ணம் சதானந்தன் (31 வயது), சரவணமுத்து சத்தியநாதன் (25 வயது) ஆகியோரே கொல்லப்பட்டவர்களாவர்.
இருவரும் சுட்டுக்கொல்லப்பட்ட பின்னர் ரயர்கள் போடப்பட்டு எரிக்கப்பட்டதாக பொலிஸ் விசாரணைகள் மூலம் தெரியவந்துள்ளது.
இவ்விருவரும் வவுனியா நகருக்கு வந்தபோது மோட்டார் சைக்கிளுடன் காணாமல்போயிருந்ததாகவும் தெரிவிக்கப்படுகிறது.
0 விமர்சனங்கள்:
Post a Comment