சர்வதேச சமூகத்திலுள்ள புலி ஆதரவாளர்களே தவறான தகவல்களை வெளியிடுகின்றனர் : கெஹெலிய
"சர்வதேச சமூகத்திலுள்ள புலி ஆதரவாளர்களே தவறான தகவல்களை வெளியிட்டுக் குழப்பத்தை ஏற்படுத்துகிறார்கள்." இவ்வாறு கூறினார் பாதுகாப்பு செயலர் கெஹெலிய ரம்புக்வெல. இன்று பாதுகாப்பு ஊடக மத்திய நிலையத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் பேசுகையிலேயே அவர் இதனைத் தெரிவித்தார். அவர் அங்கு தொடர்ந்து பேசுகையில், "கடந்த சில தினங்களாக வடக்கில் இடம்பெறும் யுத்தம் காரணமாக சர்வதேச சமூகத்தினர் பல அறிக்கைகளை வெளியிட்டு வருகின்றனர். அதாவது நடைமுறையில் சாத்தியப்படாத சில சம்பவங்கள் உருவாக்கப்பட்டு அவை தொடர்பிலான அறிக்கைகளே வெளியிடப்பட்டு வருகின்றன.
இது எமக்கு வேதனையை அளிக்கிறது. அதாவது புதுக்குடியிருப்புப் பகுதியில் நிலவும் நிலைமைகள் தொடர்பில் பல கருத்துக்கள் வெளியிடப்பட்டுள்ளன. புதுக்குடியிருப்பு பகுதியில் எறிகணை மற்றும் மோட்டார் தாக்குதல்களைப் படையினர் வைத்தியசாலைகள் மீது நடத்தி முற்றாக அளித்துள்ளனர் என்றும் நோயாளிகள் பலர் மேலும் காயமடைந்துள்ளதாகவும் பலர் கொல்லப்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது..
சர்வதேச சமூகத்திலுள்ள புலி ஆதரவாளர்களே இவ்வாறான தகவல்களை வெளியிட்டு மக்களைத் தூண்டி விடுகின்றனர் . கடந்த சில தினங்களாகக் கூறப்பட்ட விடயம் : சிவிலியன்கள் படுகொலை செய்யப்படுகிறார்கள் என்பது. தற்தோதைய நிலைமையின் படி நூற்றுக்கு 40 சதவீதமே யுத்தகளமாகக் காணபப்டுகிறது .இதில் தான் 3 லட்சம் பேர் உள்ளார்கள் எனக் கூறப்பட்டது. அவர்கள் அங்கு தான் இருக்க வேண்டும். சிவிலியன்களை ஏற்றிச் செல்வதாகக் கூறிவிட்டு, அந்த வாகனங்களில் வெடிபொருட்களை நிறைத்துச் செல்கிறார்கள். அவை சில வேளைகளில் வெடித்து சிதறும் போதுதான் பலர் கொல்லப்படுகின்றனர். இதைப் பற்றிக் கூற எவருமே இல்லை..
விடுதலைப்புலிகள் சிவிலியன்களை விடுவிக்காது தமது கட்டுப்பாட்டுக்குள் வைத்திருப்பது பற்றி யாருமே கதைப்பதாக இல்லை. இலங்கை இராணுவத்தினர் கொத்தணிக்குண்டுகளைப் பாவிக்கின்றனர் என சர்வதேச சமூகம் குற்றம் சாட்டியது. நாம் அதைப் பாவிப்பது என்றால், நாமே அதை உற்பத்தி செய்ய வேண்டும். யார் அதை உற்பத்தி செய்வது? கொத்தணிக் குண்டுகளைப் பாவித்தனர் எனக் குற்றம் சாட்டிய சர்வதேச சமூகமே பின்னர் அது தவறு என குறிப்பிட்டது. படையினர் சிவிலியன்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்திக் கொண்டே தமது படை நடவடிக்கைகளை மேற்கொள்கின்றனர். பாதுகாப்பு வலயம் அமைக்கப்பட்டுள்ளது. இது வரை 1200க்கும் அதிமானோர் இப்பாதுகாப்பு வலயத்திற்கு வந்துள்ளனர்"என்றார். இராணுவப் பேச்சாளர் உதய நாணயக்கார பேசுகையில்,"படையினர் முல்லைத்தீவுப்பகுதியை 177 சதுர கிலோ மீற்றருக்கு மட்டுப்படுத்தியுள்ளனர். விஸ்வமடுவின் கிழக்கு பகுதியில் படை நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. பாதுகாப்பு வலயத்தின் கிழக்காக படை நடவடிக்கைகளை மேற்கொள்ளப்பட்டுள்ளன. சாலை கைப்பற்றப்பட்டதன் பின்னர் புதுக்குடியிருப்பு பகுதியில் படை நடவடிக்கைகளை மேற்கொண்டிருக்கின்றனர். .
சாலைப்பகுதியில் கடற்புலித்தளம் ஒன்று கைப்பற்றப்பட்டது. 2008இல் பேர் அரசக்கட்டுப்பாட்டுப் பகுதிக்கு 2035 பேர் வந்துள்ளனர். அதே வேளை 1736 பேர் அரச கட்டுப்பட்டுப் பகுதிக்கு நேற்றைய தினம் வந்தடைந்துள்ளனர் " என்றார்.
0 விமர்சனங்கள்:
Post a Comment