ஆயுதங்களை கைவிடுமாறு புலிகளுக்கு எரிக் சொல்ஹெய் கோரிக்கை
எனிமேல் ராணுவ ரீதியாக வெல்ல முடியாது, ஆயுதங்களை கைவிடுமாறு நோர்வேயின் அபிவிருத்தி அமைச்சர் எரிக் சொல்ஹெய் விடுதலைப் புலிகளிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.
நேற்று வியாழக்கிழமை இந்தியா சென்றிருந்த எரிக் சோல்ஹெய்ம் அங்கு ஏற்கனவே சென்றிருந்த ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் செயலர் பான் கீ மூன் மற்றும் இந்தியாவின் பாதுகாப்பு ஆலோசகர் எம்.கே.நாரணயன் ஆகியோருடன் மேற்கொண்ட சந்திப்பின் பின்னர் ஊடகத்திற்கு பேட்டி அளிக்கையில் இதனைத் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக எரிக் சோல்ஹெய்ம் கூறுகையில், இராணுவ ரீதியாக வெற்றிகொள்ள முடியாது என்பதை விடுதலைப் புலிகள் புரிந்துகொள்ள வேண்டும். எனவே, ஆயுதங்களை கீழே வைத்துவிட்டு, அமைதியான முறையில் அரசியல் தீர்வு காண்பதற்கு முன்வரவேண்டும்.
போரை நிறுத்துவதற்கு புலிகள் ஆயுதங்களைக் கீழே வைத்துவிட்டு, இலங்கை அரசுடன் இணங்கிப் போகவேண்டும் என்பதையே நோர்வே, ஜப்பான், ஐரோப்பிய ஒன்றியம், அமெரிக்கா இணைந்த இணைத் தலைமை நாடுகள் கடந்த செவ்வாய்கிழமை வெளியிட்ட கூட்டறிக்கையிலும் வெளிப்படுத்தியிருந்தது என்று எரிக் சோல்ஹெய்ம் தெரிவித்துள்ளார்.
0 விமர்சனங்கள்:
Post a Comment