இரு குடும்பப் பெண்கள் புத்தளத்தில் தற்கொலை
புத்தளம் கரவலகஸ்வௌ பகுதியில் இளம் குடும்பப் பெண் ஒருவர் நஞ்சு அருந்தி தற்கொலை செய்துகொண்ட சம்பவம் சுதந்திர தினமன்று இடம்பெற்றுள்ளது.
கணவனின் துன்புறுத்தல்கள் காரணமாகவே இப்பெண் தற்கொலை செய்து கொண்டதாக மரணவிசாரணையில் தெரிவிக்கப்பட்டது.
ஒரு பிள்ளையின் தயான வசந்தகுமாரி (36 வயது) என்ற பெண்ணே இவ்வாறு தற்கொலை செய்துகொண்டவராவார்.
இதேவேளை, கடந்த ஞாயிற்றுக்கிழமை புத்தளம் எலுவங்குளம் பகுதியில் மேரி யசிந்தா (32 வயது) என்ற குடும்பப் பெண் தனக்குத்தானே தீ மூட்டித் தற்கொலை செய்துகொண்டார்.
இவர் எரிகாயங்களுடன் புத்தளம் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சையின் பின்னர் மரணமானார்.
இப்பெண்ணும் குடும்பத்தில் கணவனுடன் ஏற்பட்ட தகராறு காரணமாகவே இவ்வாறு தற்கொலை செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டது.
0 விமர்சனங்கள்:
Post a Comment