வன்னி மக்களுக்காக யாழ் பல்கலைக்கழகத்தில் பிரார்த்தனை
வன்னி மக்களின் பாதுகாப்பை வலியுறுத்தி யாழ் பல்கலைக்கழகத்தில் பிரார்த்தனை நிகழ்வுகள் நடைபெற்று வருகின்றன. கடந்த திங்கட்கிழமை முதல் இந்த நிகழ்வுகள் நடைபெற்று வருகின்றன.
வன்னியில் நடத்தப்படும் தாக்குதல்களில் அப்பாவித் தமிழ் மக்கள் கொல்லப்படுவதை நிறுத்த வேண்டும், அம்மக்களைப் பாதுகாப்பதற்கு உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டுமெனக் கோரியே யாழ் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் இந்த மௌனப் பிரார்த்தனையையும், உபவாசத்தையும் ஏற்பாடு செய்துள்ளது.
வன்னியிலிருந்து இடம்பெயர்ந்து முகாம்களில் தங்கவைக்கப்பட்டிருக்கும் மக்கள் மனிதாபிமானத்துடன் நடத்தப்பட வேண்டுமெனவும் அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
அத்துடன், இலங்கையில் சமாதானத்தை ஏற்படுத்துவதற்கான அழுத்தத்தை சர்வதேசம் வழங்கவேண்டுமெனவும் யாழ் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் தெரிவித்துள்ளது.
இதேவேளை, கடந்த சில வாரங்களுக்கு முன்னர் வன்னியிலுள்ள மக்களைப் பாதுகாக்கக் கோரி யாழ் பலைக்கலைக்கழக மாணவர் ஒன்றியம் வகுப்புக்களைப் பகிஷ்கரிக்கும் போராட்டமொன்றை நடத்தியிருந்தமை இங்கு குறிப்பிடத்தக்கது.
0 விமர்சனங்கள்:
Post a Comment