இந்தியப் படையினரின் உதவிகள் பெற்றுக்கொள்ளப்படவில்லை? - உதய நாணயக்கார
தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு எதிராக முன்னெடுக்கப்படும் யுத்தத்திற்கு இந்தியப் படையினரின் ஒத்துழைப்புப் பெற்றுக்கொள்ளப்பட்டதாக வெளியாகும் செய்திகள் உண்மைக்குப் புறம்பானவை என இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் உதய நாணயக்கார தெரிவித்துள்ளார்.
இந்திய அதிகாரிகள் இலங்கைப் படையில் இணைந்து செயற்படவில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார். இந்திய விசேட இராணுவப் படையினரினால் இலங்கைப் படையினருக்கு பயிற்சி வழங்கப்படுவதாகவும், மோதல்களின் போது இந்திய படையினர் காயமடைந்துள்ளதாகவும் செய்திகள் வெளியாகியிருந்தன.
காயமடைந்த இந்திய படைவீரர்கள் கொழும்பு இராணுவ வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
0 விமர்சனங்கள்:
Post a Comment