முல்லைத்தீவின் பல பகுதிகளில் இருதரப்புக்குமிடையில் கடும் மோதல்
முல்லைத்தீவு மாவட்டத்தின், புதுக்குடியிருப்பு தெற்கு, உடையார்கட்டுக்குளம், விசுவமடு, துணுக்காய் போன்ற பகுதிகளில் படையினருக்கும் விடுதலைப் புலிகளுக்கும் இடையில் கடும் மோதல்கள் இடம்பெற்றுள்ளன. இதில் விடுதலைப் புலி உறுப்பினர்கள் 15 பேர் கொல்லப்பட்டதுடன், 29க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்துள்ளனர்.
அத்துடன், படைத்தரப்புக்கும் சிறியளவில் சேங்கள் ஏற்பட்டுள்ளது என்று தேசிய பாதுகாப்புக்கõன ஊடக மத்திய நிலையம் தெரிவித்தது.
மோதலில் ஈடுபட்டு வரும் படையினருக்கு உதவும் வகையில் விமானப் படையினரது குண்டுவீச்சு விமானங்களும் புலிகளின் இலக்குகளை நோக்கி குண்டுகளை வீசித் தாக்குதல் நடத்தியதாகவும் ஊடக நிலையம் தெரிவித்தது.
இது தொடர்பில் பாதுகாப்புக்கான ஊடக மத்திய நிலையம் மேலும் கூறியதாவது
நேற்று அதிகாலை முதல் மாலை 6 மணிவரையான காலப்பகுதியில் படையினருக்கும் புலிகளுக்கும் இடையில் கடும் மோதல்கள் இடம்பெற்றுள்ளன. இதன் போது அரசாங்கத்தால் பிரகடனப்படத்தப்பட்ட பாதுகாப்பு வலயப் பகுதியிலிருந்து படையினர் மீது புலிகள் ஆட்லறி மற்றும் எறிகணைத் தாக்குதலை மேற்கொண்டுள்ளனர். இதில் படைத்தரப்புக்கு சிறியளவில் சேதங்கள் ஏற்பட்டுள்ளன.
படையினரின் பதில் தாக்குதல்களின் போது புலிகளுக்கு பலத்த சேதங்கள் ஏற்பட்டுள்ளன. மோதலை அடுத்து அப்பகுதிகளில் மேற்கொள்ளப்பட்ட சோதனை நடவடிக்கையின் போது விடுதலைப் புலிகளின் தொலைத்தொடர்பு கோபுரம் உட்பட ஆயுதங்கள் பலவும் மீட்கப்பட்டுள்ளன.
இதேவேளை, முல்லைத்தீவு மற்றும் உடையார்கட்டக்களம் அணைக்கட்டு போன்ற பகுதிகளில் அமைந்துள்ள விடுதலைப் புலிகளின் இனங்காணப்பட்ட இரு இலக்குகள் மீது விமானப் படைக்குச் சொந்தமான மிக் 27 ரக தாக்குதல் ஜெட் விமானங்கள் குண்டுத் தாக்குதலை நடத்தி புலிகளுக்கு சேதத்தினை ஏற்படுத்தியுள்ளனர்.
0 விமர்சனங்கள்:
Post a Comment