புலிகள் இதனை செவிமடுப்பார்களா?
பொதுமக்களின் இழப்புகளைத் தவிர்ப்பதற்காக புலிகள் ஆயுதங்களை கீழே வைக்க வேண்டும்
இலங்கையின் வடக்கே யுத்தம் நடைபெறும் பிரதேசங்களில் பொதுமக்களுக்கு ஏற்படும் உயிரிழப்புகளைத் தவிர்ப்பதற்காக விடுதலைப்புலிகள் தங்களது ஆயுதங்களை கீழே வைப்பது குறித்து பரிசீலிக்க வேண்டுமென இணைத்தலைமை நாடுகள் கோரியுள்ளன.
அமெரிக்கா, ஜப்பான், நோர்வே மற்றும் ஐரோப்பிய ஒன்றியம் ஆகியவற்றை உள்ளடக்கிய இலங்கைக்கு உதவி வழங்கும் இணைத்தலைமை நாடுகளே நேற்று செவ்வாய்க்கிழமை இந்த வலியுறுத்தலை விடுத்திருக்கின்றன.
விடுதலைப்புலிகள் தங்களிடம் எஞ்சியிருக்கும் நிலப்பரப்பை இழப்பதற்கு ஒருவேளை இன்னும் சிறிது காலமே இருக்கலாமென்றும் அந்த நாடுகள் சுட்டிக்காட்டியிருக்கின்றன.
இதனால் ஆயுதங்களை கைவிட்டு அரசு வழங்கிய பொதுமன்னிப்பை ஏற்று அரசிடம் சரணடைவதன் மூலம் மேலும் உயிரிழப்புகள் ஏற்படுவதைத் தவிர்க்க முடியும்.
இதனால் மோதல்களை முடிவுக்கு கொண்டு வருவது குறித்து விடுதலைப்புலிகள் இலங்கை அரசுடன் பேச்சுகளை நடத்துவதுடன் ஆயுதங்களை கைவிடுவது, வன்முறைகளைக் கைவிடுவது என்பதுடன் அரசின் பொது மன்னிப்பை ஏற்றுக் கொண்டு அரசியல் தீர்வொன்றைக் காணும் விதத்தில் செயற்பட வேண்டும்.
இதனால் போரில் காயமடைந்தவர்கள் மற்றும் நோயாளிகளை யுத்தம் நடக்கும் பிரதேசங்களிலிருந்து வெளியேற்ற உதவும் வகையில் தற்காலிக யுத்த நிறுத்தமொன்றுக்குச் செல்லுமாறும் இலங்கை அரசுக்கு இணைத்தலைமை நாடுகள் கோரிக்கை விடுத்துள்ளன.
அத்துடன் முல்லைத்தீவு மாவட்டத்திலுள்ள புதுக்குடியிருப்பு வைத்தியசாலை மீது ஷெல் தாக்குதல்களை நடத்த வேண்டாம் என்றும் இந்த அமைப்பு கோரிக்கை விடுத்துள்ளது.
0 விமர்சனங்கள்:
Post a Comment