புலிகளுடன் தொடர்புடைய நபர் குச்சவெளியில் கைது
புலிகளுடன் தொடர்புடைய முக்கிய சந்தேக நபர் ஒருவரை குச்சவெளியில் பொலிஸார் கைது செய்துள் ளனர். தற்கொலைத் தாக்குதல் நடத்துவதற்கு தயாரான நிலையில் வைக்கப்பட்டிருந்ததாகச் சந்தேகிக்கப்படும் மோட்டார் சைக்கிள் இரண்டும் இவரிடமிருந்து பொலிஸார் கைப்பற்றியுள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளர், சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் ரஞ்சித் குணசேகர தெரிவித்தார்.
புலிகளுடன் தொடர்பு வைத்திருந்த சந்தேகத்தின் பேரில் ஜனவரி 5 ஆம் திகதி சதாசிவம் என்பவரை குச்சவெளி பொலிஸார் கைது செய்திருந்தனர்.
இவர் வழங்கிய தகவலையடுத்தே மற்றைய சந்தேக நபர் மோட்டார் சைக்கிகளுடன் கைது செய்யப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.
கைது செய்யப்பட்ட நபரிடமிருந்து ரிஜி-மிரி 5894, ரிஜி-ஸிணி-4394 என்ற இலக்கத் தகடுகள் உடைய இரண்டு மோட்டார் சைக்கிள்களை பொலிஸார் கைப்பற்றியுள் ளனர்.
இவற்றில் ஒரு மோட்டார் சைக்கிளின் அடிச் சட்ட த்தின் இலக்கமும், வாகன இயந்திர இலக்கமும் மாற் றியமைக்கப்பட்டுள்ளதாக குறிப்பிட்ட பொலிஸ் ஊடக பேச்சாளர் இருவரும் தொடர்ந்தும் விசாரணைக்குட்படு த்தப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டார்.
0 விமர்சனங்கள்:
Post a Comment