"இலங்கை பற்றி எரிகையில் புதுடில்லி வேண்டுமென்றே பிடில் வாசிப்பது ஏன்?'
இலங்கை எரிகையில் டில்லி வேண்டுமென்றே பிடில் வாசிப்பதில் ஆச்சரியம் இல்லை. ஏனெனில் ஜெயின் ஆணைக்குழுவின் இறுதி அறிக்கையிலுள்ள வெளிப்படுத்தப்படாத வார்த்தைகளின் "சக்தியே' இதற்கான காரணமாகும்.
இவ்வாறு ரெடிவ்கொம் இணையத்தளம் குறிப்பிட்டுள்ளது. இலங்கை எரிகையில் புதுடில்லி ஏன் பிடில் வாசிப்பது என்ற தலைப்பில் சென்னையை தளமாக கொண்டு செயற்படும் பட்டயக் கணக்காளர் எம்.ஆர்.வெங்கடேஷ் ரெடிவ் கொம்மில் கட்டுரையொன்றை எழுதியுள்ளார். அதில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது;
வி.பி.சிங்கின் தேசிய முன்னணி அரசில் தி.மு.க. முக்கிய பங்காளியாக இருந்தது. இலங்கையிலிருந்து இந்திய அமைதிகாக்கும் படை முழுமையாக வாபஸ் பெறுவதற்கு இணங்கியது. தேசிய முன்னணி அரசாங்கமாகும். அதன்பின் இந்திய முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி படுகொலை செய்யப்பட்டார். ராஜீவ் படுகொலையில் தி.மு.க.வுக்கும் பங்கு இருந்ததாக காங்கிரஸ் கட்சி குற்றம்சாட்டியது. 1997 இல் ஜெயின் ஆணைக்குழுவின் இடைக்கால அறிக்கையின் பிரகாரம் சதி முயற்சியில் தி.மு.க.வுக்கு பங்கு இருப்பதாக குற்றம்சாட்டிய காங்கிரஸ் குஜ்ரால் தலைமையிலான ஐக்கிய முன்னணி அரசை பதவி கவிழவைத்தது. ஆனால் ராஜீவ் படுகொலை விவகாரத்தில் தி.மு.க. சம்பந்தப்படுத்தப்பட்டிருப்பது தொடர்பான விவகாரம் பற்றிய ஜெயின் ஆணைக்குழுவின் அறிக்கை மர்மமானமுறையில் இரகசியமாகவே வைக்கப்பட்டிருக்கிறது. இடைக்கால அறிக்கையில் தி.மு.க.வை குற்றம் சாட்டிய போதும் ஜெயின் ஆணைக்குழு தனது இறுதி அறிக்கையில் இது தொடர்பாக மௌனம் சாதிப்பது இந்திய அரசியலில் உள்ள சதிவிடயங்களில் மிகவும் முக்கியமான தொன்றாகும்.
2003 இல் காங்கிரஸும் தி.மு.க.வும் கூட்டணி அமைத்தன. தற்போது ஐக்கிய முற்போக்கு முன்னணியில் இவையிரண்டும் பங்காளிகள். அதேசமயம் தமிழகத்தில் காங்கிரஸ் தயவிலேயே தி.மு.க.ஆட்சி நடத்த வேண்டியுள்ளது.
இலங்கைத் தமிழரை பாதுகாக்குமாறு உரத்துக் குரல் கொடுக்கும் தி.மு.க.புலிகள் விவகாரத்திலும் இலங்கையில் இடம்பெறும் இனப்படுகொலை தொடர்பாகவும் அமைதியாகவே இருக்கிறது. ஆதலால் ஐக்கிய முற்போக்கு முன்னணி அரசிலிருந்து வெளியேறப் போவதாக தி.மு.க.அச்சுறுத்தல் விடுத்தால் அது வெறும் மிரட்டலாகவே இருக்கும்.
ஏனைய திராவிடக்கட்சிகள் குறித்தும் காங்கிரஸ் நன்கு அறியும். இந்திய அரசியலில் தந்திரமுள்ள கிழட்டு நரியான பிரணாப் முகர்ஜிக்கு தமிழக அரசியல்வாதிகளின் அதிகாரப் போதை குறித்து நன்கு தெரியும். அபரிமிதமாக கதைப்பதைத் தவிர இலங்கைத்தமிழர்கள் குறித்து இவர்கள் அதிகளவுக்கு கவலைப்படமாட்டார்கள் என்பதும் காங்கிரஸ் அறியும்.
தமிழர் பிரச்சினை குறித்து முழக்கமிடும் இந்த அரசியல்வாதிகள் தமது பதவிகள், வருமானங்களை கைவிடமாட்டார்கள். கட்சிகளின் உறுப்பினர்கள் தற்கொலை செய்வதும் தலைவர்கள் ஒப்பாரிவைப்பதும் ஆச்சரியம் இல்லை.
0 விமர்சனங்கள்:
Post a Comment