ஈழத் தமிழர்களுக்காக உயிரையே கொடுக்கின்றேன்
கொலுவநல்லூர் முத்துக்குமார், பள்ளப்பிட்டி ரவி, இந்த வரிசையில் சீர்காழி ரவிச்சந்திரனும் இணைந்து தனது இன்னுயிரை இலங்கைத் தமிழர்களுக்காக மாத்துக்கொண்ட சம்பவம், தமிழகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. ரவிச்சந்திரன் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த பிரமுகர் என்பதுதான் இதில் ஆச்சரியமான விஷயம். ஆனால் அவர் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்தவர் அல்ல என்று அக் கட்சியின் தலைமை அறிவிக்க, தமிழ் ஈழ ஆதரவாளர் பலரும் கொதித்துப் போவிட்டனர். இறந்த ரவிச்சந்திரனுக்கான இறுதிச் சடங்கை நாங்களே செகின்றோம் என்று இலங்கைத் தமிழர் பாதுகாப்பு இயக்கத்தினர் கையிலெடுத்து நடத்தி முடித்திருக்கின்றனர்.
நாகை மாவட்டம் சீர்காழியைச் சேர்ந்தவர் ரவிச்சந்திரன். இவர் நகர காங்கிரஸ் கமிட்டி பதினேழாவது வார்டு செயலாளராக இருந்து வந்ததோடு, தலைஞாயிறு கூட்டுறவு சர்க்கரை ஆலையில் பருவகால ஊழியராகவும் பணியாற்றி வந்தார். அவரது தாயார் சரஸ்வதி காங்கிரஸ் கட்சியில் நகர மகளிர் அணி துணைத் தலைவியாகவும் பொறுப்பு வகித்து வருகிறார்.
""சமீபத்தில் சீர்காழி வந்தார் அமைச்சர் மணி சங்கர் அயர். அவரது காரின் மீது செருப்புகளை வீசியெறிந்து கறுப்புக்கொடி காட்டி தங்கள் எதிர்ப்புகளைத் தெரிவித்தனர் இலங்கைத் தமிழர் பாதுகாப்பு இயக்கத்தினர். இது ரவிச்சந்திரனை வெகுவாகப் பாதித்துவிட்டது. அன்றைய தினம் நடைபெற்ற கூட்டத்திலும் அமைச்சர் கார் மீது செருப்பை வீசியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். அவர்கள் மட்டும்தான் தமிழர்களா? நானும் தமிழன்தான். என்னாலும் தீக்குளிக்க முடியும்' என்று ரவிச்சந்திரன் ஆவேசமாகப் பேசினார். அதைச் செதும் காட்டிவிட்டார் என்கின்றனர் காங்கிரஸ் கட்சியினர்.
மகனின் இறந்த உடலுக்கருகே கதறிக் கொண்டிருந்த ரவிச்சந்திரனின் தா சரஸ்வதியிடம் பேசினோம். ""ராத்திரி ஒரு மணி இருக்கும். தூங்காம முழிச்சிக்கிட்டே இருந்தவன், திடீரென வீட்டிலிருந்த மண்ணெண்ணெயை எடுத்து உடம்புல ஊத்திக் கிட்டான். இலங்கைத் தமிழர் வாழ்க... ராஜபக்ஷே ஒழிக'ன்னு சத்தம் போட்டுக்கிட்டே வெளியே ஓடினான். நாங்களும் எழுந்து அவன் பின்னால் ஓடினோம். "இலங்கையில என் சொந்தங்கள் செத்துக்கிட்டு இருக்காங்க. இங்கே எனக்கு எதுக்கு இந்த உசுரு'.. அப்படின்னு சொல்லிக்கிட்டு தீப்பெட்டியக் கொளுத்தப்போனான்.
கையிலிருந்த தீப்பெட்டியைப் படாதபாடு பட்டு பிடுங்கிட்டோம். அங்கிருந்து ஓடினவன் பக்கத்து கோயில் வாசல்ல எரிஞ்சிக்கிட்டு இருந்த விளக்கை எடுத்து உடம்பு மேல போட்டுக்கிட்டான். அவன் எரிஞ்சபடி துடிச்சதைப் பார்த்து என் நெஞ்சே வெடிச்சுருச்சு. இப்ப எங்களை விட்டு ஒரேயடியா போச் சேர்ந்துட்டான்' என்றவர், அதற்கு மேல் பேசமுடியாமல் கதறத் தொடங்கினார்.
ஆபத்தான கட்டத்திலிருந்த ரவிச்சந்திரனை மயிலாடுதுறை மருத்துவமனைக்குக் கொண்டு சென்றார்கள். தகவலறிந்து காங்கிரஸ் கட்சிப் பிரமுகர்கள் உட்பட அனைத்துக் கட்சியினரும் மருத்துவமனையின் முன் குவியத் தொடங்க, பதற்றம் பற்றிக்கொண்டது. ஒவ்வொரு கட்சியினரும் இந்தச் சம்பவத்தை வைத்து தங்கள் அரசியல் காகளை நகர்த்தத் தொடங்கினர். ஒருபக்கம் தி.மு.க.வினர் ரவிச்சந்திரன் எங்கள் கட்சியைச் சேர்ந்தவர். அதற்கான உறுப்பினர் கார்டு எங்களிடம் இருக்கின்றது' என்று அதனை பிரதி எடுத்து மக்களிடம் விநியோகித்தார்களாம்.
"இடையில் புகுந்த இலங்கைத் தமிழர் பாதுகாப்பு இயக்கத்தினரோ மத்திய, மாநில அரசைக் கண்டித்துத்தான் ரவிச்சந்திரன் இப்படியொரு காரியத்தைச் செதுகொண்டார். அவரது மேல் சிகிச்சை மற்றும் தொடர் நிகழ்வுகளை நாங்கள்தான் செவோம்' என்று அதற்கான அனுமதியை ரவிச்சந்திரனின் தந்தை சுந்தரமூர்த்தியிடம் எழுத்து மூலம் பெற்றுக் கொண்டனர். அதே நேரம் ரவிச்சந்திரனின் உயிரும் பிரிந்துவிட்டது.
"இதனிடையே கூட்டத்திலிருந்த இலங்கைத் தமிழர் பாதுகாப்பு இயக்கத்தைச் சேர்ந்த ஒரு நபர் இங்கே தி.மு.க.காரனுக்கும், காங்கிரஸ் காரனுக்கும் வேலை இல்லை. இடத்தைக் காலி செயுங்கள்' என்று ஆவேசப்பட்டார். உடனே இருதரப்பிலும் கற்களை வீசிக்கொள்ள, பாதுகாப்பில் ஈடுபட்ட மயிலாடுதுறை டி.எஸ்.பி. ராமகிருஷ்ணனுக்கு தலையில் காயமேற் பட்டது. இதையடுத்து, காங்கிரஸ்காரர்கள் அந்த இடத்தை விட்டுச் சென்றுவிட்டார்கள். தி.மு.க. எம்.பி ஏ.கே.எஸ்.விஜயன் மட்டும் ரவிச்சந்திரனின் உடலுக்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்திவிட்டு புறப்பட்டுவிட்டார். இதன்பிறகு அனைத்துப் பொறுப் புகளையும் இலங்கைத் தமிழர் பாதுகாப்பு இயக்கத்தினர் தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்ததோடு, ரவிச்சந்திரனின் உடலை மயிலாடுதுறையிலிருந்து சீர்காழிக்கு ஊர்வலமாக எடுத்து வந்தனர்.
மறுநாள் இறுதிச் சடங்கிற்காக ரவிச்சந்திரனின் உடல் அவரது வீட்டு வாசலில் வைக்கப்பட்டிருக்க, ஏராளமான பொலிஸார் பாதுகாப்புப் பணிக்காக குவிக்கப்பட்டிருந்தனர். அன்று சீர்காழி முழுவதும் கடைகள் அடைக்கப்பட்டிருந்தன. முதல் ஆளாக வந்த வைகோ, ரவிச்சந்திரனின் உடலைப் பார்த்துக் கண் கலங்கியவர், பெற்றோர்களுக்கு ஆறுதல் கூறியதோடு தன் வெண்கலக் குரலில் வீர வணக்கம், வீர வணக்கம் என்று கோஷமிட்டவர், அருகிலிருந்த மேடையில் மாலை வரை அமர்ந்திருந்தார். தொடர்ந்து பழ.நெடுமாறன், திருமாவளவன், டாக்டர் ராமதாஸ், காடுவெட்டி குரு, (சசிகலா) நடராஜன், சுபா இளவரசன், காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த திருச்சி வேலுச்சாமி, எம்.எல்.ஏ.க்கள் சிவபுண்ணியம், வேல்முருகன், ரவிக்குமார் மற்றும் வணிகர் சங்கத் தலைவர் வெள்ளையன், கம்யூனிஸ்ட் கட்சியின் தேசியக்குழு உறுப்பினர் கோபு, பெரியார் திராவிடர்கழகப் பிரமுகர்கள் உள்ளிட்ட பலர் தங்கள் தொண்டர்கள் சகிதம் வருகை தந்து ரவிச்சந்திரனின் உடலுக்கு அஞ்சலி செலுத்தினார்கள். இடையில் அ.தி.மு.க. பிரமுகர்களும் ரவிச்சந்திரனின் உடலுக்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்திச் சென்றது பலரையும் புருவம் உயர்த்த வைத்தது.
இதனைத் தொடர்ந்து மேடையிலேறி முதலில் பேசிய வைகோ, ""ரவிச்சந்திரனின் தியாகம் விலை மதிக்கமுடியாதது. இலங்கைத் தமிழர்களுக்காக இனி யாரும் தீக்குளிக்க வேண்டாம். அவர் இறப்பதற்கு முன் எழுதப்பட்டதாகச் சொல்லப்படும் ஒரு கடிதத்தை பொலீஸார் கைப்பற்றி இருப்பதாகக் கேள்விப் பட்டேன். அதனை அவர்கள் பகிரங்கமாக வெளியிட வேண்டும்' என்று கோரிக்கை வைத்தவர், ""இலங்கையில் விடுதலைப் புலிகளை யாராலும் வெல்ல முடியாது. விடுதலைப் புலிகள்தான் ஈழத் தமிழ் மக்களின் பாதுகாப்பு அரண். ம.தி.மு.க. என்றும் எல்லா விதத்திலும் விடுதலைப்புலிகளை ஆதரிக்கும். மாணவர்கள் போராட்டத்தில் குதித்து மத்திய அரசுக்கு நெருக்கடி கொடுக்க வேண்டும். அப்போதுதான் இப்பிரச்சினைக்குத் தீர்வு கிடைக்கும்' என்று அனல் பறக்கப் பேசினார்.
தொடர்ந்து மற்ற தலைவர்கள் பேசி முடிக்க, இலங்கைத் தமிழர் பாதுகாப்பு இயக்கம் சார்பில் அதன் தலைவர் பழ.நெடுமாறன் இறந்த ரவிச்சந்திரன் குடும்பத்திற்கு மூன்று லட்ச ரூபா நிவாரணமாக வழங்கப்படும் என்று அறிவித்தார். மாலை ஆறு மணிக்கு மேல் புறப்பட்ட இறுதி ஊர்வலத்தில் ஒட்டுமொத்த தலைவர்களும் மயானம்வரை நடந்தே சென்றனர். ஊர்வலத்தில் பங்கேற்ற பலர் விடுதலைப்புலிகள் தலைவர் பிரபாகரனின் படத்தைக் கையில் பிடித்தபடி மத்திய அரசுக்கும், இலங்கை அதிபர் ராஜபக்ஷேவுக்கும் எதிரான கோஷங்களை எழுப்பிச் சென்றனர். போகும் வழியிலிருந்த காங்கிரஸ் கொடிக்கம்பத்தை உடைத்து அதிலிருந்த கொடியை உருவிய சிலர், மயானத்தில் ரவிச்சந்திரனின் உடல் தகனம் செயப்பட்டபோது அதில் போட்டு எரித்தார்களாம்.
விவேக்
குமுதம்
0 விமர்சனங்கள்:
Post a Comment