புலிகளின் பிடியிலிருந்து கடந்த வெள்ளி, சனி படையினரிடம் மட்டும் 1938 சிவிலியன்கள் தஞ்சம்
புலிகளின் பிடியிலிருந்து கடந்த வெள்ளி, சனி ஆகிய இரு தினங்களுக்குள் மாத்திரம் 1938 சிவிலியன்கள் படையினரிடம் வந்து சேர்ந்திருப்பதாக தேசிய பாதுகாப்பு தொடர்பான ஊடக மத்திய நிலையம் நேற்று தெரிவித்தது.
இவர்களுள் ஒரு பகுதியினர் நேற்று முன்தினம் புதுமாத்தளனிலிருந்து புல்மோட்டைக்கு கடற்படையினரால் அழைத்துச் செல்லப்பட்டிருப்பதாகவும் ஊடக நிலையம் குறிப்பிட்டது.
இலங்கை கடற்படையினர், ஐ. சி. ஆர். சி.யின். ஒத்துழைப்புடன் புதுமாத்தளனில் உள்ள 507 பேரை எம். வி. கிரீன் ஓசன் எனும் கப்பல் மூலம் புல்மோட்டைக்கு அழைத்துச் சென்றுள்ளது. இதில் 161 ஆண்களும் 207 பெண்களும், 32 சிறுமிகளும், 59 சிறுவர்களும், 48 குழந்தைகளும் அடங்குவதாக படையினர் தெரிவித்தனர். இதேவேளை, சனிக்கிழமை காலை 925 சிவிலியன்கள் பகுதி பகுதியாக இராணுவ கட்டப்பாட்டு பகுதியிலுள்ள படையினரிடம் வந்து சேர்ந்துள்ளனர்.
புதுக்குடியிருப்பு பகுதியிலுள்ள படையினரிடம் நேற்று முன்தினம் காலை 6 மணி முதல் மாலை 6 மணிக்குட்பட்ட காலப்பகுதியில் 258 சிவிலியன்கள் வந்து சேர்ந்துள்ளனர். இவர்களுள் 73 ஆண்கள் 85 பெண்களும் 53 சிறுவர்களும் 47 சிறுமிகளும் அடங்குகின்றனர்.
அதேவேளை முல்லைத்தீவு முனை பகுதியிலுள்ள படையினரிடம் 160 பேர் கொண்ட இன்னுமொரு சிவிலியன்கள் குழுவும் படையினரிடம் சரணடைந்துள்ளனர். இக்குழுவில் 43 ஆண்கள் 48 பெண்கள், 27 சிறுவர்கள் மற்றும் 42 சிறுமிகளும் அடங்குவதாக ஊடக மத்திய நிலையம் குறிப்பிட்டது.
கடந்த வெள்ளிக்கிழமையும் முனையிலுள்ள படையினரிடம் 88 சிவிலியன்கள் வந்து சேர்ந்துள்ளனர். இவர்களுள் 22 ஆண்கள், 23 பெண்களும் 26 சிறுவர்களும் 17 சிறுமிகளும் அடங்குவதாக ஊடக மத்திய நிலையம் குறிப்பிட்டது.
0 விமர்சனங்கள்:
Post a Comment