யாழ். மக்களுக்கு இனிப்பான செய்தி!
மிக நீண்டகால இடைவெளிக் குப் பின்னர் யாழ்குடாநாட்டு மக்கள் ஏனைய பிரதேச மக்க ளைப் போல அன்றாட பாவ னைப் பொருட்களை சாதாரண விலையில் பெற்றுக் கொள்ளப் போகிறார்கள்.
இச்செய்தியானது அவர்களுக்கு உண்மை யில் மகிழ்ச்சியளிக்கவே செய்யும். யுத்தத்தின் கொடுமையில் நீண்ட காலம் உழன்று, வட பகுதிக்கான தரைவழிப் போக்குவரத்து துண் டிக்கப்பட்டிருந்ததன் விளைவாக அல்லலுற்ற அம்மக்களின் துன்பம் இனிமேல் தீரப் போகின்றதென்பது இனியதொரு செய்தி.
அதுமாத்திரமன்றி சித்திரைப் புத்தாண்டை சிறப்பாகக் கொண்டாடுவதற்கும் யாழ். குடா மக்களுக்கு இப்போது வழி பிறந்துள்ளது.
யாழ். குடாவுக்கும் தென்னிலங்கைக்கும் இடையேயான தரைவழிப் போக்குவரத்து மிக நீண்ட காலமாகத் துண்டிக்கப்பட்டிருந் ததன் விளைவாக அம்மக்கள் அடைந்த துன் பங்கள் கொஞ்ச நஞ்சமல்ல...
உணவு உட்பட அத்தியாவசிய பாவனைப் பொருட்கள் அனைத்தையும் இருமடங்கு, மும்மடங்கு விலை கொடுத்தே அவர்கள் வாங்க வேண்டியிருந்தது. அங்குள்ள சாதா ரண தொழிலாளவர்க்கத்தினரும் வறிய மக்க ளும் தங்களது ஜீவனோபாயத்தைக் கொண்டு நடத்த அனுபவித்த கஷ்டங்கள் விபரிக்க முடி யாதவையாகும்.
யாழ்குடாநாடு மட்டுமன்றி வன்னிப் பிர தேசமும் அன்றைய காலத்தில் உணவு உற்பத் தியில் தன்னிறைவு கண்ட பிரதேசங்களாக விளங்கின. பழங்கள், மரக்கறி, வெங்காயம், மிளகாய் உட்பட உப உணவுப் பொருட்களை நாட்டின் தென்பகுதிக்கு விநியோகிக்கும் உற் பத்தித்தளமாக வடபகுதி அன்று விளங்கியது.
இதன் காரணமாக செல்வம் கொழிக்கும் இடமாக வடபகுதி மண் அன்றைய காலத் தில் திகழ்ந்தது. வடபகுதி மக்கள் உண விலோ கல்வியிலோ அன்றைய காலத்தில் ஏனைய பிரதேசங்களை நம்பியிருக்காமல் சொந்தக் காலிலேயே நின்றனர்.
இரு தசாப்தங்களுக்கு முன்னர் உருவெடுத்த யுத்தம் அனைத்தையும் சீரழித்தது. உணவு உற் பத்தி, கடற்றொழில், வர்த்தகம் என்றெல் லாம் அனைத்தும் சீரழிந்து வடபகுதி மக்கள் கையேந்த வேண்டிய நிலைமைக்குத் தள்ளப் பட்டமை பெரும் வேதனை.
கமத்தொழிலுக்கான செலவினங்கள் அதிகரி த்தன. கடல் வலயக் கட்டுப்பாடுகள் காரண மாக மீன்பிடித் தொழில் பாதிக்கப்பட்டது. இத்தனை கஷ்டங்களுக்கு மத்தியில் பெறப்ப ட்ட உற்பத்திப் பொருட்களை தென்பகுதிக்கு அனுப்ப தரைவழிப் போக்குவரத்து இல்லா மல் போனதால் சந்தை வாய்ப்புப் பாதிக்கப் பட்டது. தொழிலாளர்கள் வருமானம் இழந் தனர்.
அதேசமயம் தென்னிலங்கையிலிருந்து யாழ். குடாநாட்டுக்குரிய பொருட்கள் மட்டுப்படுத் தப்பட்ட அளவிலேயே சென்றன. கூடிய விலை கொடுத்து யாழ். மக்கள் பொருட் களை வாங்க வேண்டியேற்பட்டதுடன் ஏரா ளமான பொருட்களுக்குத் தட்டுப்பாடும் நில வியது.
இது போன்ற நீண்ட காலத் துன்பம் இப் போது முடிவுறும் காலம் வந்திருக்கிறது. அத் தியாவசிய பொருட்கள் அத்தனையையும் யாழ் குடாநாட்டு மக்கள் சாதாரண விலையில் பெற்றுக் கொள்ளக் கூடிய துரித நடவடிக்கை களையும் அரசாங்கம் தற்போது மேற்கொண் டுள்ளது.
கொழும்பிலுள்ள தனியார் வர்த்தகத் துறை யினருக்கு யாழ்ப்பாணம் சென்று வர்த்தகத் தில் ஈடுபடுவதற்கான அனுமதியை வழங்குவ தற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது.
கொழும்பிலிருந்து பொருட்கள் தரைவழி யாக தாராளமாகச் செல்லத் தொடங்கி விட் டால் யாழ்ப்பாணத்தில் பொருட்களின் விலை கள் சாதாரண நிலைமைக்கு வந்து விடு மென்பதில் எந்தவித ஐயமுமில்லை. அம்மக் கள் புத்தாண்டை மகிழ்ச்சியாகக் கொண்டா டப் போகிறார்களென்பதும் இனிப்பான செய் தியாகும்.
இதற்கு முன்னோடியாக கொழும்பிலுள்ள தனியார் வர்த்தகத் துறையினருடன் நாளை செவ்வாய்க்கிழமை அத்தியாவசிய சேவைகள் ஆணையாளர் நாயகம் விசேட சந்திப்பொ ன்றை நடத்தவிருக்கிறார்.
அத்தியாவசியப் பொருட்கள் அனைத்தும் யாழ். குடா நாட்டில் தட்டுப்பாடின்றிக் கிடை ப்பதற்கு வழி செய்வதற்காகவே இச்சந்திப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
பல வருட காலத்துக்குப் பின்னர் யாழ். மக் களும் ஏனைய மக்களைப் போல வாய்ப்புக ளைப் பயன்படுத்தப் போகிறார்கள். இச் செய்தி அவர்களுக்கு நிம்மதி தருகிறது.
0 விமர்சனங்கள்:
Post a Comment