பிரிட்டன் டிவி நடிகை ஜேட்கூடி(27) புற்றுநோயால் நேற்று மரணம் அடைந்தார்.
பிரிட்டன் "டிவி' நடிகையான ஜேட்கூடி "பிக் பிரதர்' டிவி தொடர் மூலம் பிரபலமானவர். குறிப்பாக கடந்த 2007ம் ஆண்டு பிக் பிக் பிரதர் "டிவி' நிகழ்ச்சியில் பங்கு கொண்ட பாலிவுட் நடிகை ஷில்பா ஷெட்டியை இன பேதத்துடன் திட்டினார். இதனால், மனமுடைந்த ஷில்பா ஷெட்டி கதறி அழுதார்.
இந்த நிகழ்ச்சி உலகம் முழுவதும் பரபரப்பாக பேசப்பட்டது. பின்னர் ஷில்பா ஷெட்டியிடம், ஜேட்கூடி மன்னிப்பு கேட்டார். அதன் பின் இந்தியாவிலும் சுற்று பயணம் செய்தார்.இதற்கிடையே அவருக்கு கருப்பைவாய் புற்றுநோய் முற்றி விட்டது. இனிமேல் சிகிச்சை அளிக்க முடியாது, என மருத்துவர்கள் கை விரித்து விட்டனர்.
இதையடுத்து இரண்டு மகன்களுக்கு தாயான ஜேட்கூடி தனது நண்பரை கடந்த மாதம் திருமணம் செய்து கொண்டார். மரணம் தன்னை நெருங்கி விட்டது என உணர்ந்த ஜேட்கூடி, இந்த நோய் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சிகளில் பங்கு கொண்டார். இந்நிலையில், நேற்று அதிகாலை தெற்கு லண்டனில் உள்ள எசக்ஸ் பகுதியில் உள்ள அவரது இல்லத்தில் தூங்கி கொண்டிருக்கும் போதே அவரது உயிர் பிரிந்தது. இத்தகவலை அவரது தாயார் ஜேக்கிபட்டன் தெரிவித்தார்.
0 விமர்சனங்கள்:
Post a Comment