மரணத்தின் விலிம்பில் ஓர் போராட்டம்
தற்கொலை செய்யும் நோக்கத்தில் 6 மாடிக்கட்டிடத்தின் மேல்தளத்திலிருந்து குதித்த 18 வயது யுவதியை, பெண் பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் மின்னல் வேகத்தில் செயற்பட்டு காப்பாற்றிய சம்பவம் சீனாவின் சங்சுன் நகரில் இடம்பெற்றுள்ளது.
சனசந்தடி மிக்க வேளையில் 6 வது மாடியிலிருந்து குதித்த யுவதியின் ஆடை, கட்டிடப்பகுதியில் வெளியில் நீட்டியிருந்த உலோகத்தில் சிக்கிக்கொள்ள அவர் அந்தரத்தில் தொங்கினார்.
ஆடை கிழிந்து எக்கணமும் யுவதி கீழே விழலாம் என்ற நிலையில், பெண் பொலிஸ் உத்தியோகத்தரான வாங் யுஹுயி தனது உயிரையும் மதிக்காது துரிதமாக செயற்பட்டு யுவதியை காப்பாற்றும் முயற்சியில் இறங்கினார்.
கட்டிடப் பகுதியில் சிக்கியிருந்த யுவதியின் ஆடை விடுபடவும் வாங் யுஹுயி யுவதியை எட்டிப்பிடிக்கவும் சரியாக இருந்தது.
உணவகமொன்றில் உணவு பரிமாறுபவராக பணியாற்றிய மேற்படி யுவதி உணவக உரிமையாளருடனான பிரச்சினகள், பணநெருக்கடி என்பனவற்றால் மிகுந்த மன அழுத்தத்திற்கு உள்ளாகிய நிலையிலேயே தற்கொலை முடிவை நாடியதாக கூறப்படுகிறது.
0 விமர்சனங்கள்:
Post a Comment